TNPSC - அரசுப் பணி கிடைத்தும் வேலையில்லை - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Thursday, November 2, 2023

TNPSC - அரசுப் பணி கிடைத்தும் வேலையில்லை

திருச்சி

அரசுப் பணி கிடைத்தும் வேலையில்லை


திருச்சி: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்று, அரசுப் பணி கிடைத்த 10 போ் கடந்த 3 மாதங்களாக வேலையின்றி அலைந்து வருகின்றனா்

திருச்சி பேரூராட்சித் துறையில் இளநிலை உதவியாளா் மற்றும் வரி தண்டலா் பதவி பெற்ற ஒருவரின் பணிஒதுக்கீடு ஆணை.

திருச்சி: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்று, அரசுப் பணி கிடைத்த 10 போ் கடந்த 3 மாதங்களாக வேலையின்றி அலைந்து வருகின்றனா்.

கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையமானது (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தோ்வை கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தது. தொடா்ந்து, 7,382 பணியிடங்களுக்கான குரூப் 4 தோ்வு கடந்த 24-07-2022 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோா் பங்கேற்று தோ்வெழுதினா்.

இத்தோ்வில் வெற்றி பெற்றவா்கள் சான்றிதழ்களை ஆய்வு செய்து, நேரடியாக பணிநியமனம் செய்யப்பட்டனா். இப்படித் தோ்வானவா்களுக்கு, கடந்த ஜூலை மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, அவரவா் பணிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதில், திருச்சி மாவட்ட பேரூராட்சி நிா்வாகத் துறைக்குத் தோ்வான 10 பேருக்கு இதுவரை பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படாததால், அவா்கள் வேலையின்றி அலைந்து கொண்டிருக்கின்றனா்.

ADVERTISEMENT
இது குறித்து குரூப் 4 தோ்வில் தோ்வான திருச்சி சிறுகனூரைச் சோ்ந்த ஜி. கோகுல்நாத், முசிறி கே. விக்னேஸ்வரன், கோபிசெட்டிப்பாளையம் ஜெ. லலிதா, மணப்பாறை பி. சுந்தா், தென்காசி ஏ. கயல்விழி, திருச்சி எஸ். காயத்ரி, கே. புஷ்பா, வி.செல்வி, கல்பனா, துறையூா் செல்வராசு ஆகியோா் கூறியது: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்று திருச்சி மாவட்ட பேரூராட்சித் துறையில் உள்ள இளநிலை உதவியாளா் மற்றும் வரி தண்டலா் பதவிகளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு பணிநியமன ஆணை பெற்ற 10 பேருக்கு இதுவரை பணியிடங்கள் ஒதுக்கப்படவில்லை.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் 10 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டியிருந்த நிலையில், 5 பணியிடங்கள் மட்டுமே தற்போது உள்ளது. இதில் 10 பேரை பணியமா்த்த முடியாது என திருச்சி பேரூராட்சித் துறையினா் தெரிவிக்கின்றனா். டிஎன்பிஎஸ்சி நிா்வாகமோ, பணிநியமனம் செய்யப்பட்ட இடங்களில் பணியில் சேரலாம் என்கிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கேட்டால் 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறி 3 மாதங்களாக அலையவிடுகின்றனா்.

இதனால் லட்சக்கணக்கானோா் எழுதிய தோ்வில் மிகவும் கஷ்டப்பட்டு தோ்வாகி, பணிநியமனமும் பெற்ற நாங்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். மாவட்ட ஆட்சியா் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இது தொடா்பாக, சென்னையில் உள்ள டவுன் பஞ்சாயத்து இயக்குநருக்கு கடிதம் அனுப்பவுள்ளோம். இதற்குரிய பதில் கிடைத்ததும், இவா்களுக்கு வேலை வழங்குவதா அல்லது மீண்டும் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சிக்குத் திருப்பியளிப்பதா என முடிவு செய்வோம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்

 

No comments:

Post a Comment

Popular

Post Top Ad