மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த ஜாக்பாட் – 8வது ஊதியக்குழு அமல்!!
8வது ஊதியக்குழு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது தான் தீபாவளி பண்டிகையையொட்டி 4% அகவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழுவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், 8ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறு, மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால் ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்படும். இவ்வாறு, 8ஆவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால் ஊழியர்களின் ஃபிட்மெண்ட் காரணி 3.68 மடங்காக அதிகரிக்கலாம். இதனால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 44.44 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும்
No comments:
Post a Comment