2024-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Tuesday, September 19, 2023

2024-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

2024-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

F6Xr_otXgAANRvH

2024-ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.


அடுத்த கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்கள், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜேஇஇ முதல் தேர்வு ஜனவரி 24, 2024 முதல் பிப்ரவரி 1, 2024 வரையும், ஜேஇஇ இரண்டாம் தேர்வு ஏப்ரல் 1, 2024 முதல் ஏப்ரல் 15, 2024 வரையும் நடைபெறவுள்ளது

மேலும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு(நீட்) மே 5, 2024 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல், க்யூட் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 15, 2024 முதல் மே 31,  2024 வரையும், முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 11, 2024 முதல் மார்ச் 28, 2024 வரையும் நடைபெறவுள்ளது.

யுஜிசி-நெட் முதல் தேர்வுகள் ஜூன் 10, 2024 முதல் ஜூன் 21, 2024 வரையும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது


No comments:

Post a Comment

Popular

Post Top Ad