உங்களோட நிலத்தின் பட்டா வேறு ஒருத்தர் பெயரில் இருக்கா? 30 நாளில் மாற்றிடலாமே!

சென்னை: உங்கள் நிலம் வேறு ஒருவர் பெயரில் பட்டா இருக்கிறது என்றால் அதை எப்படி சரி செய்வது? அல்லது பட்டா பிழைத்திருத்தம் வேண்டி எவ்வாறு விண்ணப்பம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதுகுறித்து சுயதொழில் தொடங்குவோம் என்ற சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நில உடமை மேம்பாட்டுத் திட்டத்திலும், கணினி பதிவிலும் என்பதை வருவாய் துறை அலுவலர்கள் ஒப்புக்கொண்டு உள்ளார்கள். ஆகவே நமது நிலம் வேறு ஒருவருக்கு பிழையாக பட்டா அளிக்கப்பட்டு இருந்தால் அதற்காக நாம் பதட்டமடைய தேவையில்லை. எளிய வழியில் 60 நாட்களில் நாம் தவறை சரிசெய்து மீண்டும் பழைய பெயருக்கே பிழையை 

அதற்கான வழிமுறைகள்

திங்கள்கிழமை மனுபெறும் நாளில் இந்த விண்ணப்பம் செய்யக் கூடாது. தனியாக பதிவு அஞ்சலில் மட்டுமே மனு செய்யலாம்.
முதலில் கோரிக்கை விண்ணப்பம் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். இவர்கள் தான் பிழை திருத்தம் செய்து ஆணையிடும் அதிகாரம் உள்ளவர்கள

நில உடமை மேம்பாட்டு திட்டத்தில் ஏற்பட்ட பிழை திருத்தம் வேண்டி விண்ணப்பம். அல்லது
கணினி சிட்டா பதிவேற்றத்தில் ஏற்பட்ட பிழை திருத்தம் வேண்டி விண்ணப்பம். அல்லது
தவறாக வழங்கப்பட்ட பட்டா பெயர் பிழை திருத்தம் வேண்டி விண்ணப்பம். இந்த மூன்றில் உங்களுக்கு பொருத்தமான தலைப்பை தேர்வு செய்யுங்கள்

பிழை திருத்தம் வேண்டி விண்ணப்பம்

(பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன்) தேதி..........
அனுப்புநர் ;
பெயர்
முமுகவரிஏ


பெறுநர்,
மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்
............. மாவட்டம்

அய்யா,
பார்வை
1. பத்திர நகல்
2. எனது பெயருக்கு உள்ள பிழைக்கு முந்தைய சிட்டா, அடங்கல், மற்றும் "அ" பதிவேட்டின் நகல்
3. பிழையாக அளிக்கப்பட்டு உள்ள சிட்டா நகல்
பொருள்; . பிழை திருத்தம் வேண்டி மனு

பிரசாணைக்கு உரிய நிலம் விபரம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம்
,,,,,,,,,,,,,,,,,,, தாலுக்கா ,,,,,,,,,,,,,,,,,,,,,,, கிராமம்
,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, சர்வே எண்/எண்கள்
மேற்படி சர்வே என்னுடைய நிலம்
,,,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம்
,,,,,,,,,,, தாலுக்கா,,,,,,,,,,,,,,,,,,,,,, கிராமத்தில்
வசிக்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,, என்பவற்றின்
மகன்,,,,,,,,,,,,,,,,,, ஆகிய எனக்கு உரிமையானதாகும்.

ஆனால் தற்பொழுது கிராம பதிவேட்டில் ,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,தாலுக்கா,,,,,,,,,,,,,,,,,,என்பவற்றின் மகன்,,,,,,,,,,,,,,,,என்றவரின் பெயருக்கு தவறாக பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Advertisement

ஆகவே
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம்
,,,,,,,,,,,,,,,,,,, தாலுக்கா
,,,,,,,,,,,,,,,,,,,,,,, கிராமம்
,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, சர்வே எண்/எண்கள் கொண்ட எனது நிலத்தின் மீது தவறாக பதிவு செய்துள்ள கிராமணக் கணக்கு பிழையை சரி செய்து மீண்டும்
,,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம்
,,,,,,,,,,, தாலுக்கா
,,,,,,,,,,,,,,,,,,,,,, கிராமத்தில்
வசிக்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,, என்பவற்றின் மகன்,,,,,,,,,,,,,,,,,, ஆகிய எனது பெயருக்கே மாற்றி பதிவு செய்ய ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் பிழை திருத்தம் செய்தபிறகு என் பெயருக்கான சிட்டா நகல், அடங்கல் நகல் , கிராம பதிவேட்டில் நகல் அளித்து உத்தரவிடவும் வேண்டுகின்றேன்.

இப்படிக்கு
.......... ஒப்பம்

இணைப்புகள்

1. பத்திர நகல்
2. எனது பெயருக்கு உள்ள பிழைக்கு முந்தைய சிட்டா, அடங்கல், மற்றும் "அ" பதிவேட்டின் நகல்
3. பிழையாக அளிக்கப்பட்டு உள்ள சிட்டா நகல்

இந்தக் கடிதம் அனுப்பிய 30 நாட்களில் தவறு சரிசெய்யப்பட்டு ஆணைகளிடப்படும். இல்லையேல் தகவல் சட்டம் மூலம் இம்மனுவின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் கேட்பதன் மூலம் ஆணை பெறலாம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.