பென்சன் திட்டத்தில் பெரிய மாற்றம்.. முக்கிய ஆலோசனையில் மத்திய அரசு! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Thursday, November 2, 2023

பென்சன் திட்டத்தில் பெரிய மாற்றம்.. முக்கிய ஆலோசனையில் மத்திய அரசு!

பென்சன் திட்டத்தில் பெரிய மாற்றம்.. முக்கிய ஆலோசனையில் மத்திய அரசு!

பழைய பென்சன் திட்டம் பற்றி முக்கிய அப்டேட்.. மாற்றம் செய்ய அரசு தயார்.. பழைய ஓய்வூதியம் போன்ற சலுகைகள் கிடைக்கும்.


பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்குப் பதிலாக, புதிய பென்சன் திட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது.

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தேசிய பென்சன் திட்டத்தில் (NPS) மத்திய அரசு சில மாற்றங்களைச் செய்யக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றத்துக்குப் பிறகு ஓய்வு பெற்ற பின், கடைசி நாட்களில் ஊழியர்கள் பெறும் சம்பளத்தில் 40 முதல் 45 சதவீதம் வரை ஓய்வூதியம் கிடைக்கும். இது தொடர்பாக உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.

இன்னும் அறிவிப்பு வரவில்லை!

இன்னும் அறிவிப்பு வரவில்லை!பென்சன் திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. எனினும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் பென்சன் திட்டம்!
மீண்டும் பென்சன் திட்டம்!தற்போது பென்சன் தொடர்பான போராட்டங்களில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. அதேநேரம், பாஜக அல்லாத பல மாநில அரசுகளால் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பென்சன் திட்டத்தில் பிரச்சினை!

பென்சன் திட்டத்தில் பிரச்சினை!பழைய பென்சன் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு கடைசி ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வழிவகை உள்ளது. இது குறித்து பல்வேறு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளன்ர். இது மாநில அரசுகளை திவாலாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்று அவர்கள் கூறியுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் நிதி ரீதியாக நிலையற்றதாக உள்ளது என்றும், இதனால் மாநிலங்களின் கடன் சுமை அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

புதிய பென்சன் திட்டம்!

புதிய பென்சன் திட்டம்!தற்போது அமலில் இருக்கும் புதிய பென்சன் திட்டம் கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஆகும். இதில், பணியாளர்கள் அடிப்படைச் சம்பளத்தில் 10 சதவீதம் பங்களிக்க வேண்டும். அதேபோல, அரசாங்கம் 14 சதவீதம் பங்களிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை.
ஊழியர்கள் எதிர்பார்ப்பு!
ஊழியர்கள் எதிர்பார்ப்பு!புதிய பென்சன் திட்டத்தின் கணக்கீடுகளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அரசாங்கம் அதிக வருமானத்தை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது. இதற்குப் பிறகு, பணியாளர் மற்றும் முதலாளியின் பங்களிப்பில் மாற்றங்கள் இருக்கும். தேசிய பென்சன் திட்டத்தின் கீழ், ஒரு பணியாளர் ஓய்வுபெறும் போது மொத்த கார்பஸில் 60 சதவீதத்தை திரும்பப் பெறலாம். இது வரி விலக்கு பெற்றது.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad