பென்ஷன் பணத்தை பெற புது ரூல்ஸ்... தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தேசிய பென்ஷன் திட்டத்தின் (என்.பி.எஸ்) கீழ் பணம் எடுப்பதற்கான விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இது குறித்து 27 அக்டோபர் 2023 அன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளின் படி…
*தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பணம் எடுக்க `பென்னி டிராப்' சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பென்னி டிராப் முறை என்பது சந்தாதாரர்களின் வங்கி கணக்கு ஆக்டிவாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க முதலில் ஒரு சிறிய தொகை அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
*சந்தாதாரர்கள் மொத்த ஓய்வூதிய தொகை 60 சதவிகிதத்தை மொத்தமாக பெறுவதற்கு பதில், தங்களின் விருப்பத்தின் பேரில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் திரும்ப பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
*பெயர் பொருத்தம் செய்ய, பணம் எடுக்க, விண்ணப்பங்களைச் செயலாக்கம் செய்ய, ஓய்வூதிய திட்டத்தில் இருந்து வெளியேற, வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு விவரங்களை மாற்ற என அனைத்திற்கும் பென்னி டிராப் முறை சரியாக இருக்க வேண்டும்.
*இந்த சரிபார்ப்பு முறைகள் தோல்வியடையும் பட்சத்தில், சந்தாதாரர்களுக்கு உடனடியாக மொபைல் மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்,
*பென்னி டிராப் சரிபார்ப்பில் சென்ட்ரல் ரெக்கார்ட் கீப்பிங் ஏஜென்சி தோல்வியுறும் பட்சத்தில், சந்தாதாரரின் வங்கிக் கணக்குத் தகவலைச் சரிசெய்வதற்கு சம்பந்தப்பட்ட நோடல் அலுவலகம் அல்லது இடைத்தரகர்கள் ஈடுபடுத்துவார்கள்.
*சரிபார்ப்பு முறைகள் தோல்வியுறும் பட்சத்தில், திட்டத்தில் இருந்து வெளியேறுதல் மற்றும் சந்தாதாரரின் வங்கிக் கணக்கு விவரங்களை மாற்றுவதற்கான கோரிக்கை மறுக்கப்படும்
*தேசிய பென்ஷன் திட்டம், அடல் பென்ஷன் யோஜனா, மற்றும் தேசிய பென்ஷன் திட்டம் லைட் ஆகிய அனைத்து வகையான திட்டத்தில் இருந்து வெளியேறுதற்கும் மற்றும் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை மாற்றியமைப்பதற்கும் இந்த விதிகள் பொருந்தும்.
*தேசிய பென்ஷன் திட்டத்தில் மொத்த வைப்புத்தொகை மற்றும் 5 லட்ச ரூபாய்க்கும் குறைவான வட்டி உள்ள சந்தாதாரர்கள் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுக்கலாம். இதில் எந்த மாற்றமும் இல்லை.
* 40% தொகையை பென்ஷனுக்கு பயன்படுத்த வேண்டும். மற்ற 60 சதவிகித தொகையை ஒரே நேரத்தில் எடுக்கலாம்.
*முன்கூட்டியே பணம் எடுப்பதற்கும் தேசிய பென்சன் திட்டத்திலிருந்து வெளியேறுவதற்கும் உடனடி வங்கிக் கணக்குச் சரிபார்ப்பு இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் சரியான நேரத்தில் சந்தாதாரகளின் நிதியை அவர்கள் கணக்கில் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment