தமிழ்நாட்டை பின்பற்றும் தெலங்கானா… காலை உணவுத் திட்டம் அறிமுகம்!
kamadenu%2F2023-09%2F734af399-2a36-42a3-a910-aa0ce78aae6d%2Fmor_meal.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=400&dpr=3

தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் தற்போது அமலில் உள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள பள்ளிகளில் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.


காலை உணவுத் திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்க உள்ளது. திட்டம் குறித்து அறிந்து கொள்ள அண்மையில் தெலங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர்.


இந்நிலையில், தெலங்கானா முழுவதும் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 2ம் தேதி முதல் சத்தான காலை உணவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு தசரா பரிசாக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தைக் கொண்டு வருவதாக அம்மாநில ஆளுங்கட்சியினர் கூறியுள்ளனர். இத்திட்டத்திற்காக தெலங்கானா அரசு ஆண்டுக்கு ரூ.400 கோடி செலவிட உள்ளது