அட்டகாசமான அப்டேட்.. மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம்: உத்தரவு அளித்த உயர்நீதிமன்றம்
பழைய ஓய்வூதிய திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: சமீபகாலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடு முழுவதும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களில் ஓபிஎஸ் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஊழியர்கள் நீதிமன்றக் கதவுகளையும் தட்டியுள்ளனர். இதற்கிடையில், இது தொடர்பாக உத்தர பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு அம்மாநில ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சாதகமாக வந்துள்ளது.
2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் ஆட்சேர்ப்புச் செயல்முறை தொடங்கப்பட்டு, தாமதமாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது, இதுபோன்ற சூழ்நிலையில், 2005 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன் தேர்வு செய்யப்பட்ட கணக்காளர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. உபி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற தகுதியான ஊழியர்களின் விவரங்களை பல துறைகளும் கேட்கத் தொடங்கியுள்ளன.
இந்த விவகாரம் எப்படி நீதிமன்றத்துக்கு வந்தது?
2005 க்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் பழைய ஓய்வூதிய (Old Pension Scheme) பலனையும் பெற வேண்டும் என்று கணக்காளர் சங்கம் மற்றும் பிற ஆமைப்புகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2004 முதல் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாநில அரசு இதை ஏப்ரல் 1, 2005 முதல் அமல்படுத்தியது.
மத்திய அரசு ஊழியர்களை போல முறையிட்ட கணக்காளர்கள், 1999ல் கணக்காளர் பணிக்கான விளம்பரம் வெளியிடப்பட்டதாகவும், 2005ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகே பணி நியமனம் கிடைத்ததாகவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தற்போது அவர்களுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது தவிர, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சம்பளத்தில் பிடித்தம் செய்வதை மாற்றி, ஓபிஎஸ் (OPS) கீழ் ஜிபிஎப்-ல் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் vs புதிய ஓய்வூதியத் திட்டம்
1. NPSல், பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
2. தேசிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எனவே இது ஒப்பீட்டளவில் குறைவான பாதுகாப்பு கொண்டதாகக் கருதப்படுகிறது.
3. இதன் கீழ், ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெற NPS நிதியில் 40% முதலீடு செய்ய வேண்டும்.
4. இந்தத் திட்டத்தில் ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை.
5. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி வழங்கப்படுவதில்லை.
பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)
1. இதன் கீழ், கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீதம், ஓய்வுக்குப் பிறகு மொத்தத் தொகையுடன் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
2. 80 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான ஏற்பாடும் உள்ளது. ஜி.பி.எஃப்-க்கான ஏற்பாடும் உள்ளது.
3. இதன் கீழ், 20 லட்சம் ரூபாய் வரை கருணைத் தொகை வழங்கப்படுகிறது.
4. இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படுகிறது. பணியாளரின் சம்பளத்தில் இருந்தும் பணம் கழிக்கப்படுவதில்லை.
5. ஓய்வு பெற்ற ஊழியரின் மனைவிக்கு அவர் இறந்தவுடன் ஓய்வூதியம் வழங்கும் வசதி இதில் உள்ளது. இதன் கீழ், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை டிஏவும் வழங்கப்படுகிறது. இதனால், ஓய்வூதியத் தொகை தொடர்ந்து அதிகரிக்கிறது.
No comments:
Post a Comment