தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெறக்கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Friday, November 3, 2023

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெறக்கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். இதற்காக பள்ளி மாணவர்களிடமும் கையெழுத்து பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிராக மாநில அரசு போராட்டம் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. மாணவர் நலனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் வகையில் அமைந்தால் வழக்கு தொடரலாம்.” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad