20% வரி? கிரெடிட் கார்டு வைத்துள்ளீர்களா.. இதை படிங்க முதலில்! ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு
டெல்லி: கிரெடிட் கார்டு பயன்பாட்டு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கடந்த மாதம் கிரெடிட் கார்டுகளான 20 சதவீத TCS வரி குறித்து மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இது குறித்து மத்திய அரசு இப்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்குப் பணத்தை எடுத்துச் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. பொதுவாக வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகள் அல்லது அமெரிக்க டாலரையே எடுத்துச் செல்வார்கள்
இதுபோக வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு மூலமும் பொதுமக்கள் செலவு செய்வார்கள். வெளிநாடுகளில் சுற்றுலா செல்லும் போது கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்வோராக இருந்தால் உங்களுக்காகத் தான் இந்த செய்தி.
இந்தியர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய Liberalised Remittance Scheme எனப்படும் LRS திட்டம் உள்ளது. இந்த நடைமுறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 250,000 டாலர் அதாவது சுமார் 2 கோடி ரூபாய் வரை நாம் வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். இதை வைத்து முதலீடு செய்யலாம் அல்லது அங்கே செலவு என எது வேண்டுமானாலும் செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு அனுப்ப எந்தவொரு முன் அனுமதியும் பெறத் தேவையில்லை
இப்படி இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பினால், அதற்கு 20% டிசிஎஸ் எனப்படும் TCS வரி வசூலிக்கப்படும், இதை அடுத்த நிதியாண்டின் வருமான வரி தாக்கல் செய்யும் போது தாக்கல் செய்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வரி முதலில் 5%ஆக இருந்த நிலையில், சமீபத்தில் தன் இதற்கான வரி 20% உயர்த்தப்பட்டது. அதேநேரம் சுற்றுலா அல்லது அலுவலக பயணத்திற்காக வெளிநாடு செல்லும் போது கிரெடிட் கார்டு மூலம் செலவழிக்கும் தொகை இந்த Liberalised Remittance Scheme வராது என்ற நிலையே இருந்தது.
வெளிநாட்டு கிரெடிட் கார்டு பேமெண்ட்-க்கு 5 சதவீத வரி மட்டுமே இப்போது விதிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் இந்த விதியை மாற்றும் வகையிலான அறிவிப்பை ரிசர்வ் வங்கி கடந்த மாதம் வெளியிட்டது. அதாவது இந்தியாவுக்கு வெளியே வெளிநாடுகளில் இந்தியர்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலவு செய்யும்போது அதற்கு 20% TCS வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த வரி முறை அமலுக்கு வருவதாக இருந்தது.
அதன்படி வெளிநாடுகளில் உணவு, பேக், அவ்வளவு ஏன் தண்ணீர் பாட்டில் வாங்கினால் கூட அதுவும் LRS திட்டத்தின் கீழ் வரும் என்றும் இதற்காக 20% TCS வரி வசூலிக்கப்படும் என்று இருந்தது. இந்த புதியி ரூல்ஸ் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே இதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. கிரெடிட் கார்டு செலவுகளுக்கும் 20% TCS வரி என்றே மக்கள் கூறினர். இருப்பினும், கிரெடிட் கார்டு செலவுகளை LRS திட்டத்தின் கீழ் கொண்டு வரவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது
0 Comments