வருமான வரி 12 லட்சம் வரை ஒரு ரூபாய் கூட வரி இல்லை.. New regime டூ old regimeக்கு இனி எப்படி மாறுவது?

சென்னை: வருமான வரி கட்டுவோர் புதிய அல்லது பழைய என இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்வார்கள். ஒருவேளை எதுவும் தேர்வு செய்யாவிட்டால் புதிய முறைக்கு தானாக தேர்வு செய்துவிடும்... அப்படி தேர்வானவர்கள் எப்படி பழைய முறைக்கு மாற முடியும் என்பதை இப்போது பார்ப்போம். அதேபோல் வருமான வரிமுறையில் யாருக்கு எது பெஸ்ட் ஆப்சன் என்பதையும் பார்ப்போம்.

ADVERTISEMENT

வருமான வரி விதிப்பில் புதிய முறைக்கு தானாகவே தேர்வானவர்கள்.. ITR file செய்கையில் நீங்கள் Old Regime க்கு மாற வேண்டுமானால், Form 10-IEA என்கிற படிவத்தை ஜூலை 31 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். இதுதான் தற்போது உள்ள நடைமுறை..

ADVERTISEMENT

Up to 12 lakhs one rupee does not need to be taxed in income tax old regime   economists

சரி வருமான வரிமுறையில் யாருக்கு எது பெஸ்ட் ஆப்சன் தெரியுமா? அதை பற்றி இப்போது பார்ப்போம். உங்கள் வருமானம் வரி விதிக்கக்கூடிய வகையின் கீழ் வந்தால், வரிகளைக் கணக்கிடுவதற்கு பழைய வரி முறை அல்லது புதிய வரி முறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். புதிய வரி விதிப்பு முறையில் வருமான வரி விகிதங்கள் ஒப்பீட்டளவில் குறைவு. ஆனால் பழைய வரி விதிப்பு முறையில் அதிக வருமான வரி விலக்குகளைப் பெற உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. அதாவது சரியாக சொல்லப்போனால், உங்கள் வரிக்குரிய வருமானத்தைக் குறைத்து காட்ட முடியும். அதன் மூலம் வரிகளுக்காக கட்ட வேண்டிய தொகையையும் குறைக்கிறது

எந்த வருமான வரி முறை உங்களுக்கு அதிக வரியைச் சேமிக்கும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? புதிய வரி விதிப்பின் கீழ், உங்கள் வருமானம் ரூ. 7 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், உங்களுக்கு வரி இல்லை. நீங்கள் சம்பளம் பெறும் தனிநபராக இருந்தால், நீங்கள் ரூ. 50,000 நிலையான விலக்கு உண்டு. எனவே ரூ. 7.5 லட்சம் வரையிலான வரிக்கு உட்பட்ட வருமானத்திற்கு வரி செலுத்த மாட்டீர்கள். எனினும் உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 7.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், எவ்வளவு குறைவாக இருந்தாலும், முழு வருமானத்திற்கும் வருமான வரி கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

ADVERTISEMENTஆனால் என்னவென்றால் புதிய வரி விதிப்பு முறையை பொறுத்தவரை குறைந்த வரிதான் விதிக்கப்படுகிறது. அதேநேரம் புதிய வரி முறையின் கீழ், வரி செலுத்துவோர் 80C, 80D, 24 போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் விலக்குகளை கோர முடியாது. இருப்பினும், நிலையான விலக்கு, குடும்ப ஓய்வூதியம் போன்ற சில விலக்குகள்  லட்சத்திற்கு மேல் இருந்தால், பழைய மற்றும் புதிய வரி முறைகளில் உங்களுக்கு எது பெஸ்ட் என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். இந்தியாவில் அதிக வரி விலக்கு கோரக்கூடிய நபர்களுக்கு பழைய வரி முறை சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது.
பழைய வரி விதிப்பில் பல விலக்குகள் உள்ளன. உதாரணமாக நீங்கள் அதிகமாக சேமிக்கக்கூடிய நபர், பல்வேறு முதலீகளை செய்கிறவர் என்றால், உங்களுக்கு பழைய வரிவிதிப்பு முறை சிறப்பாக இருக்கும் என்கிறார்கள் பொருளதார நிபுணர்கள்.. நீங்கள் சேமிக்கக்கூடிய நிலையில் இல்லை என்றால், நிச்சயம் புதிய வரி விதிப்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

வரி சேமிப்பு மற்றும் முதலீடு என இரட்டைப் பலன்கள்: பழைய வரி விதிப்பு முறையை பொறுத்தவரை நீங்கள் வழக்கமான முதலீடுகளைச் செய்வதற்கும் வரிச் சேமிப்பை அனுபவிக்கவும் அற்புதமான வாய்ப்பு ஆகும். "பழைய வரி விதிப்பு முறை என்பது சேமிப்பவர்களுக்கு சொர்க்கம். பழைய வரி விதிப்பு ஒருவரை சேமிக்க கட்டாயப்படுத்துகிறது. அப்படி இருந்தால் தான் வரிகளை சேமிக்க முடியும்

பிரிவு 80c : பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம். PPF அல்லது ELSS போன்றவற்றில் முதலீடுகளுக்கான விலக்குகளை பெற பிரிவு 80C இன் கீழ் வ ரூ. 1.5 லட்சம் வரை குறைக்கலாம். அதேபோல் லைப் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டுகிறீர்கள் என்றால் அதையும் விலக்காக 80சியில் முடியும். குழந்தைகளின் கல்வி கட்டணம், வீட்டு வாடகை போன்றவற்றை 80 சியில் காட்ட முடியும்.

இதேபோல் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் குடும்பத்திற்கு 25000 வரையிலும், முதியவர்கள் என்றால் 50000 வரை வருமான வரியில் கழிக்க முடியும்.. பிரிவு 80CCD (1B) இன் கீழ் ரூ. 50,000த்தை என்பிஎஸ்இல் முதலீடு செய்து' , ரூ. 1.5 லட்சம் வரம்பிற்கு மேலும் வரி விலக்கு பெறலாம் (2லட்சம்). இதேபோல், உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியாக நீங்கள் லீவ் டிராவல் அலவன்ஸை வாங்குறீங்க அப்படீன்னா, உங்கள் பயணத்திற்காக செலவழிக்கப்பட்ட பணத்தை விலக்காக கோரி சேமிக்க முடியும். அதேபோல் வீட்டுக் கடன் வாங்குபவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் 24 (பி) பிரிவின் கீழ் வட்டி செலுத்துவதன் மூலம் ரூ. 2 லட்சம் வரை விலக்கு கோர முடியும்.

நன்கொடைகளுக்கு பிரிவு 80G இன் கீழ் நீங்கள் விலக்கு கோர முடியும். இல்லப்பா என்னால் நன்கொடை தர இயலாது. எனக்கு சேமிப்பு முக்கியம் என்று நீங்கள் நினைத்தால் 80TTA பிரிவின் கீழ், வங்கிக் கணக்குகளைச் சேமிப்பதன் மூலம் பெறப்படும் வட்டியில் 10,000 ரூபாய்க்கு விலக்கு பெறலாம். மூத்த குடிமக்கள் குறிப்பிட்ட டெபாசிட்டுகளில் பெறப்படும் வட்டிக்கு ரூ.50,000 வரை விலக்கு பெற முடியும். இதேபோல் நீங்கள் கல்விக் கடன் வாங்கி இருந்தால், வட்டியாக நீங்கள் செலுத்தும் முழுத் தொகைக்கும் விலக்கு கோரலாம். பழைய வருமான வரியை பொறுத்தவரை கிட்டதட்ட 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வந்தாலும் வருமான வரி ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டியது இல்லை.. ஆனால் ஐந்து லட்சத்திற்குமேல் உள்ள பணத்தை அதற்கு சேமிக்க வேண்டும். உங்களால் சேமிக்க முடியாது.. அல்லது சேமிக்கககூடிய நிலையில் இல்லை என்றால், தாராளமாக புதிய வரிவிதிப்பு முறைக்கு போகலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்