அரசு ஊழியர்களுக்கு HRA 3% உயர்வு… வெளியான முக்கிய தகவல்! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Sunday, July 2, 2023

அரசு ஊழியர்களுக்கு HRA 3% உயர்வு… வெளியான முக்கிய தகவல்!


 அரசு ஊழியர்களுக்கு HRA 3% உயர்வு... வெளியான முக்கிய தகவல்!

அரசு ஊழியர்களுக்கு HRA 3% உயர்வு… வெளியான முக்கிய தகவல்!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நடப்பு ஆண்டு வீட்டு வாடகை படி உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வாடகை படி:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மே மாதம் 7வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி அகவிலைப்படி 4% உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

 இதனையடுத்து அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்த கட்டமாக மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் அகவிலைப்படி (DA) 46 % ஆக அதிகரிக்கும். இதனால் ஊழியர்களுக்கு ஊதியமும் கூடுதலாக கிடைக்கும்.

இதற்கு மத்தியில் மேலும் மகிழ்ச்சியான செய்தியாக வீட்டு வாடகை படி உயர்த்தப்படும் என்ற தகவல்கள் வந்துள்ளது. சுமார் 3% வரையிலும் இந்த வீட்டு வாடகைபடி உயர்த்தப்படலாம். இந்த தகவலின் படி HRA 27% லிருந்து 30% ஆக உயரும். இந்த வீட்டு வாடகை படியானது நகரங்களின் பட்டியல் அடிப்படையில் உயர்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Popular

Post Top Ad