சென்னை: தமிழ்நாட்டில் பதிவுத்துறையால் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவு உள்ளிட்ட பனிகளுக்கான சேவை கட்டணங்களை உயர்த்தி தமிழ்நாடு அரசு இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பதிவுத்துறைக்கான கட்டணங்கள் கடந்த பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் பதிவுத் துறையின் சேவை கட்டணங்களை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பதிவு துறை: தமிழ்நாட்டில் பல காலமாகப் பதிவுத் துறைக்கான கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்தது. கடந்த சில காலமாகவே பதிவுத்துறைக்கான சேவை கட்டணங்களை உயர்த்துவது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. இந்தச் சூழலில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு இப்போது வெளியிட்டுள்ளது. இதில் பதிவுத் துறையின் பல சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டணம் உயர்வு: எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200/-லிருந்து ரூ.1,000/- எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்குப் பதிவுக் கட்டணம் ரூ.10,000/- என்று உள்ளதைச் சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இது 10.07.2023 முதல் நடைமுறைக்கு வருகிறது" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் மறுபுறம் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சேவை கட்டணங்கள் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்
No comments:
Post a Comment