இந்தியாவில் உள்ள அனைத்து விதமான கல்லூரிகளிலும் உதவி பேராசிரியராக பணியாற்ற தேவையான குறைந்தபட்ச தகுதியில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது பல்கலைக்கழக மானிய குழு. - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Thursday, July 6, 2023

இந்தியாவில் உள்ள அனைத்து விதமான கல்லூரிகளிலும் உதவி பேராசிரியராக பணியாற்ற தேவையான குறைந்தபட்ச தகுதியில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது பல்கலைக்கழக மானிய குழு.


இந்தியாவில் உள்ள அனைத்து விதமான கல்லூரிகளிலும் உதவி பேராசிரியராக பணியாற்ற தேவையான குறைந்தபட்ச தகுதியில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது பல்கலைக்கழக மானிய குழு.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் இதர கல்விநிலையங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமென்றால் குறிப்பிட்ட தகுதிகள் தேவை. 2021ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்ற பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


விதிகள் இப்படியிருக்க தற்போது இதே விதிகளில் மாற்றம் செய்து உத்தரவித்துள்ளது பல்கலைக்கழக மானியக்குழு. புதிப்பிக்கபட்ட விதிகளின் படி, NET,SET,SLET உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தகுதிகளின் அடிப்படையில் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.

பிஎச்டி கூடுதல் தகுதி!
மேலும், 2021ம் ஆண்டு பிஎச்டி படிப்பு முடித்திருந்தால் உதவி பேராசிரியராக பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்ட விதியை மாற்றி, பிஎச்டி படிப்பை கூடுதல் தகுதியாக சேர்த்துக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானிய குழு தனது அறிவிப்பில் அறிவித்துள்ளது.

தேசிய தகுதி தேர்வுகள்!
NET மற்றும் SET ஆகிய இரண்டு தேர்வுகளும் உதவி பேராசிரியர்கள் மற்றும் JRF தகுதி பெறுபவர்களை கண்டறிவதற்காக நடத்தப்படும் நாடு தழுவிய ஒரு தேர்வாகும். அதே போல் SLET தேர்வும் குறிப்பிட்ட மாநிலத்திற்குள் உள்ள கல்விநிலையங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கான தகுதி தேர்வாக இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment

Popular

Post Top Ad