பென்சன் வாங்குவோருக்கு செம சூப்பர் வசதி.. தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Sunday, June 25, 2023

பென்சன் வாங்குவோருக்கு செம சூப்பர் வசதி.. தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு!

பென்சன் வாங்குவோருக்கு செம சூப்பர் வசதி.. தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புகைப்படம் இல்லை
பென்சன் வாங்குவோருக்கு செம சூப்பர் வசதி.. தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு!

பென்சன் பெறுவோருக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் இருந்து ஓய்வூதியதாரா்களின் விவரங்கள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டையில் புகைப்படம் இல்லாமல் உள்ளது.

காப்பீட்டுக்கான அடையாள அட்டையில் பென்சன் பெறுவோரின் புகைப்படத்துடன், துணைவரின் புகைப்படத்தையும் ஒட்டி புதிதாக அவர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்கங்கள் சாா்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை அளிப்பதற்கான தகுந்த படிவங்களை ஓய்வூதியதாரா்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவு!
 
ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயனாளர்களுக்கு படிவம் வழங்கி அதற்குரிய ஒப்புகை சான்றை பெற்றுக்கொண்டு உடனடியாக பணியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டவுன்லோடு செய்யலாம்!
 
பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, புகைப்படங்களும் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பிறகு பயனாளிகளே தங்களுக்கான அடையாள அட்டையை மின்-அட்டையாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
அப்டேட் செய்யலாம்!
 
காப்பீடு அடையாள அட்டையில் உள்ள விவரங்களை திருத்தவும், புகைப்படங்களை பதிவேற்றம் செய்யவும் யுனெடைட் இந்தியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குரிய வரையறுக்கப்பட்ட படிவங்களை அனைத்து கருவூலம் மற்றும் ஓய்வூதிய அலுவலகங்களில் அளிக்கும்படி அந்நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் சான்றிதழ்!
 
பென்சன் வாங்குவோர் ஒவ்வொரு ஆண்டும் வாழ்க்கைச் சான்றிதழை அளிப்பதற்கான நோ்காணலுக்காக கருவூல அலுவலகங்களுக்கு வருவது வழக்கம். அப்போது, அந்தப் படிவங்களை அவா்களிடம் அளித்து பூா்த்தி செய்து பெறலாம். இந்தப் படிவங்களின் அடிப்படையில் அடையாள அட்டையில் ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் திருத்தப்பட்டு புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படும்.
படிவங்களை எங்கே வாங்குவது?
 
மின்-அடையாள அட்டையாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தப் பணியை மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காகவே உள்ள காப்பீட்டு அதிகாரியை கருவூலம் மற்றும் ஓய்வூதிய அலுவலா்கள் தொடா்பு கொள்ள வேண்டுன்று அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை விவரங்களைத் திருத்தம் செய்வது மற்றும் புகைப்படத்தை ஒட்டுவதற்குரிய தகுந்த படிவங்களைப் பெற வேண்டும்.
அதிகாரிகளுக்கு உத்தரவு!
 
பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அளிக்கும் போது உரிய ஒப்புகைச் சான்றினை பெற வேண்டியது அவசியம். இதனை அத்தியாவசியமான பணியாகக் கருதி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    
தொடர்பான செய்திகள்
• தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் Flipkart-ன் பங்கும், சேவையும்!
• கோவை மண்டலத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள்: முழு விவரங்கள் இதோ!
• அரசு ஊழியர்களுக்கு அதிரடியாக உயரும் சம்பளம்!
• ரஷ்யாவிற்கு புதிய நெருக்கடி… வாக்னர் குழு அறிவிப்பால் உள்நாட்டு போர் பதட்டம்!
• தஞ்சாவூரில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.!
• நீதிபதிகள் சம்பள உயர்வு: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முக்கிய அப்டேட்..!
அடுத்த செய்தி
• இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது கருப்பு பக்கம்.. மரண அடி வாங்கும் Q1 முடிவுகள்!
• 31 லட்சம் ரூபாய்க்கு எள் விற்பனை.. விவசாயிகள் மகிழ்ச்சி!
• ஆடு விற்பனை ஜோர்.. பக்ரீத் பண்டிகையால் எகிறும் டிமாண்ட்!
• கூகுள் CEO சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
• பொதுமக்களுக்கு அதிக காப்பீடு கிடைக்கும்.. புதிய பாலிசி அறிமுகம்!

டவுன்லோடு செய்யலாம்
பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, புகைப்படங்களும் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பிறகு பயனாளிகளே தங்களுக்கான அடையாள அட்டையை மின்-அட்டையாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
அப்டேட் செய்யலாம்!
 
காப்பீடு அடையாள அட்டையில் உள்ள விவரங்களை திருத்தவும், புகைப்படங்களை பதிவேற்றம் செய்யவும் யுனெடைட் இந்தியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குரிய வரையறுக்கப்பட்ட படிவங்களை அனைத்து கருவூலம் மற்றும் ஓய்வூதிய அலுவலகங்களில் அளிக்கும்படி அந்நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் சான்றிதழ்!
பென்சன் வாங்குவோர் ஒவ்வொரு ஆண்டும் வாழ்க்கைச் சான்றிதழை அளிப்பதற்கான நோ்காணலுக்காக கருவூல அலுவலகங்களுக்கு வருவது வழக்கம். அப்போது, அந்தப் படிவங்களை அவா்களிடம் அளித்து பூா்த்தி செய்து பெறலாம். இந்தப் படிவங்களின் அடிப்படையில் அடையாள அட்டையில் ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் திருத்தப்பட்டு புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படும்.
படிவங்களை எங்கே வாங்குவது

மின்-அடையாள அட்டையாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தப் பணியை மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காகவே உள்ள காப்பீட்டு அதிகாரியை கருவூலம் மற்றும் ஓய்வூதிய அலுவலா்கள் தொடா்பு கொள்ள வேண்டுன்று அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை விவரங்களைத் திருத்தம் செய்வது மற்றும் புகைப்படத்தை ஒட்டுவதற்குரிய தகுந்த படிவங்களைப் பெற வேண்டும்.
அதிகாரிகளுக்கு உத்தரவு!
 
பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அளிக்கும் போது உரிய ஒப்புகைச் சான்றினை பெற வேண்டியது அவசியம். இதனை அத்தியாவசியமான பணியாகக் கருதி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Popular

Post Top Ad