தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதய்சங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Sunday, June 25, 2023

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதய்சங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதய்சங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஆதனின் பொம்மை என்ற நாவல் எழுதிய உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960ம் ஆண்டு பிறந்தவர் எழுத்தாளர் உதயசங்கர். 

நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதை நூல்களை உதயசங்கர் எழுதினார்.

தமிழர்களின் தொன்மை, நாகரிகம் குறித்து எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி என எழுத்தாளர் உதயசங்கர் தெரிவித்துள்ளார். கீழடி பற்றி இளையோர் அறியும் வகையில் எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். வரலாற்றை இளையோரிடம் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாவல் எழுதினேன்.

திருக்கார்த்தியல் என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

என்னுடைய சிறுகதை தொகுப்பிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்வாக உள்ளதாக ராம்தங்கம் தெரிவித்துள்ளார். 2019ல் வெளிவந்த திருக்கார்த்தியல் சிறுகதை இதுவரை 6 விருதுகளை பெற்றுள்ளது. குழந்தை தொழிலாளர்களின் உலகம் உள்ளிட்டவை பற்றி எழுதப்பட்ட திருக்கார்த்தியல் கதைக்கு விருது அறிவிக்கப்பட்டது.

 கன்னியாகுமரி நாகர்கோவிலை சேர்ந்த எழுத்தாளர் ராம்தங்கம் ராஜவனம் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad