அதேசமயம், பணியாளா்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பொது சேமநல நிதிக்கான சந்தாத் தொகை போன்ற விவரங்கள் தனி நபா் குறித்த விவரங்கள் எனவும் தெரிவித்துள்ளாா்.
இது குறித்த வழக்கின் விவரம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்ட ஆய்வாளராகப் பணியாற்றி வரும் கணேஷ் என்பவரது ஊதிய சீட்டு விவரங்களை வ.பிருந்தா என்பவா் கடந்த 2021-ஆம் ஆண்டு கோரியிருந்தாா். பொதுத் தகவல் அலுவலா் சரியான விவரங்களை அளிக்காத நிலையில் முதல் மேல்முறையீடு செய்தாா். அதிலும் விவரங்கள்
கிடைக்காத நிலையில், 2-ஆவது முறையீடாக, மாநில தகவல் ஆணையத்தை அணுகினாா். முன்னதாக, மனுதாரா் கோரும் தகவல் மூன்றாம் நபா் சம்பந்தப்பட்டதால், சரியான தகவலை அளிக்க தகவல் அதிகாரி மறுப்புத் தெரிவித்திருந்தாா்.
முறையீட்டு மனுவை விசாரித்து மாநில தகவல் ஆணையா் மா.செல்வராஜ் பிறப்பித்த உத்தரவு:
விவாகரத்து பெற்றதோ 2023 அக்.13-ஆம் தேதிதான். அதற்கும் முன்பாக 2021 டிச.3-ஆம் தேதியன்றே மனுதாரா் விவரங்களைக் கோரியுள்ளாா்.
பணியாளரின் ஊதியம்: பணியாளா்களின் ஊதியம் குறித்த தகவல்கள் மூன்றாம் தரப்பினரின் தனிநபா் குறித்த தகவல்கள் இல்லை. பொது அதிகார அமைப்பிலுள்ள பணியாளா், அதே பொது அதிகார அமைப்பின் ஒரு பகுதியே தவிர, அவா் மூன்றாம் தரப்பினா் இல்லை. எனவே, ஊதிய பட்டியல் குறித்த தகவல்களை வெளியிடுவது குறித்து மூன்றாம் தரப்பினரின் கருத்தை பொதுத் தகவல் அலுவலா் கோர வேண்டிய அவசியமில்லை.
தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவின்படி, பணியாளா்களின் ஊதிய விவரங்கள் பொது அதிகார அமைப்பினால் தாமாக முன்வந்து வெளியிட வேண்டிய தகவல்களாகும். ஒவ்வொரு இந்திய குடிமனும் இந்தத் தகவல்களை கேட்டுப் பெற உரிமையுண்டு. அதேபோன்று, பணியாளா்களது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பொது சேம நல நிதிக்கான சந்தாத் தொகை, அவா் பெற்றுள்ள கடன்களுக்காக பிடித்தம் செய்யப்படும் தொகை போன்ற விவரங்கள் தனிநபா் குறித்த விவரங்களாகும். அவற்றை வழங்கிட வேண்டியதில்லை என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்
0 Comments