மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Sunday, June 25, 2023

மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு


மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – அறிவிப்பு வெளியீடு!

மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - அறிவிப்பு வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – அறிவிப்பு வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி அமல்படுத்தப்பட்டுள்ளதாக செஹூரில் நடந்த விழாவில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வு:

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போது 44 சதவீதமாக இருக்கிறது. மேலும், ஜூலை மாதத்திற்கு மேலும் 4% உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல தமிழகத்திலும் கடும் நெருக்கடி, கடன் சுவை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகிய காரணத்தினால் சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போது போபால் மாநிலத்தில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று அறிவித்துள்ளார். மேலும், கூடிய விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

Popular

Post Top Ad