அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 16 சதவீதம் உயர்வு., அதிகாரபூர்வ அறிவிப்பால் குவியும் பாராட்டு!!!

 அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 16 சதவீதம் உயர்வு., அதிகாரபூர்வ அறிவிப்பால் குவியும் பாராட்டு!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் 5வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் உத்திர பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில யோகி அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு அகவிலைப்படி 396 சதவீதத்திலிருந்து 412 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்த 16 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால், அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.