டெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 9ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம். www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற தளங்களில் மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம். மே 5ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகமை இந்த நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு அச்சத்தால் பல மாணவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் இதுவரைக்கும் அந்த தீர்மானத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்பவில்லை.
இந்த நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற தளங்களில் விண்ணப்பிக்கலாம். இன்று தொடங்கி
மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம். மே 5ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது. நீட் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments