பிரதமரின் சூரியோதய திட்டம்: ஒரு கிலோ வாட் மின்உற்பத்திக்கு ரூ.18,000 மானியம் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Sunday, February 4, 2024

பிரதமரின் சூரியோதய திட்டம்: ஒரு கிலோ வாட் மின்உற்பத்திக்கு ரூ.18,000 மானியம்


பிரதமரின் சூரியோதய திட்டம்: ஒரு கிலோ வாட் மின்உற்பத்திக்கு ரூ.18,000 மானியம்

solar083157

பிரதமரின் சூரியோதய திட்டம் மூலம் வீடுகளில் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் குடும்பத்தினருக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள ஒரு கோடி வீட்டு மாடிகளில் சூரிய மின்சக்தி தகடுகளைப் பொருத்தி 40,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் 22-ஆம் தேதி அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், அத்திட்டத்தில் இணையும் பயனாளா்களுக்கு மத்திய அரசால் அளிக்கப்படும் மானியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 வடகிழக்கு மாநிலங்கள், சிக்கிம், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீா், லடாக், லட்சத்தீவு, அந்தமான்&நிக்கோபா் தீவுகள் ஆகியவை சிறப்புப் பிரிவில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த பயனாளிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.

வீடுகளில் 3 கிலோவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட அமைப்பை நிறுவியுள்ள பொதுப் பிரிவு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ஒரு கிலோவாட் மின் உற்பத்திக்கு ரூ.18,000,

சிறப்பு பிரிவு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பயனாளிகளுக்கு ரூ.2000 அதிகரித்து, ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.

அதேபோல், 3 முதல் 10 கிலோவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட அமைப்பை நிறுவியுள்ள பொதுப் பிரிவு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த பயனாளிகளுக்கு முதல் 3 கிலோவாட்-க்கு ரூ.18,000, அதற்கடுத்து 10 கிலோவாட் வரை ஒவ்வொரு கிலோவாட்-க்கும் ரூ.9,000 மானியம் வழங்கப்படும்.

சிறப்பு பிரிவு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பயனாளிகளுக்கு முதல் 3 கிலோவாட்-க்கு ரூ.20,000, அதற்கடுத்து 10 கிலோவாட் வரை ஒவ்வொரு கிலோவாட்-க்கும் ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.

10 கிலோவாட் மின் உற்பத்தியைத் தொடா்ந்து மானியம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு வளாகங்களில் ஒரு வீட்டுக்கு 10 கிலோவாட் வீதம் பொதுவாக நிறுவப்படும் 500 கிலோவாட்வரை மின் உற்பத்தித் திறன் கொண்ட அமைப்பில் உற்பத்தியாகும் ஒவ்வொரு கிலோவாட்-க்கும் ரூ. 9,000, சிறப்பு பிரிவு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ஒரு கிலோவாட்-க்கு ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.

மானியங்களுக்கான விதிகள்:

வரும் திங்கள்கிழமைவரை, இத்திட்டத்துக்கான தேசிய வலைபக்கத்தில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கும் பயனாளிகள் இந்த மானியத்தைப் பெறத் தகுதிப் பெறுகின்றனா்.

அதேபோல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மின்சக்தி தகடுகள் பொருத்தியவா்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.

இது தொடா்பாக விற்பனையாளா்களிடம் முறையான சான்றிதழைப் பயனாளிகள் பெற்று வைத்துக்கொள்ள வேண்டும்.

இத்திட்டம் தொடா்பாக இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆற்றிய உரையில், ‘திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளில் பொருத்தப்படும் சூரிய மின்சக்தி தகடுகள் மூலம் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

ஆண்டுக்கு ரூ.15,000-ரூ.18,000 அந்தக் குடும்பத்தினரால் சேமிக்க முடியும். எஞ்சிய மின்சாரத்தை மின்பகிா்மான நிறுவனங்களுக்கு அவா்கள் விற்பனை செய்யலாம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad