தமிழகத்தில் மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு – அரசு புதிய உத்தரவு!
தமிழகத்தில் மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு – அரசு புதிய உத்தரவு!
தமிழக அரசின் துறை சார்ந்த ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு அக்டோபர் மாத இறுதியில் தனது ஊழியர்களுக்கான ஜூலை முதல் டிசம்பர் மாத காலங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதன்படி ஊழியர்கள் அனைவரும் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வை பெறுவதாகவும், இதன் மூலம் 46 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு தனது ஊழியர்களுக்கான நான்கு சதவீத அகவிலைப்படி அறிவிப்பை வெளியிட்டது. குறிப்பிட்ட துறைகளுக்கு அகவிலைப்படி குறித்த தனித்தனியான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய அரசின் திருக்கோயில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்தி 46 சதவீதமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு பகுதி நேர, தினக் கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சார் நிலை அலுவலர்கள் தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment