ஆசிரியர்கள் கைது - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கண்டனம் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Thursday, October 5, 2023

ஆசிரியர்கள் கைது - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கண்டனம்

ஆசிரியர்கள் கைது - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கண்டனம்

IMG_20231005_172256_wm

நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற போராடிவரும் ஆசிரியர் மீதான தமிழக அரசிள் கைது நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம். 

சம வேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி கடந்த எட்டு நாட்களாக போராடி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையினை தமிழக அரசு ஏற்க மறுத்து சமவேலைக்கு சமஊதியம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய மூவர் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு சமவேலைக்கு சமஊதியம் என்ற கோட்பாட்டினை அமல்படுத்த மறுக்கும் செயல்பாடாக , தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கருதுகிறது.

 இத்தகைய குழு அமைக்கும் நடவடிக்கையினை கைவிட்டு போராடி வரும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்கிட உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டுமெனவும் , உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீதான கைது தமிழக அரசின் கைது நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க குமலும் வேண்டுகிறோம்.

 சமவேலைக்கு சம ஊதியம் வழங்கி உரிய ஆணைகளைப் பிறப்பிக்க தமிழக அரசை , தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


No comments:

Post a Comment

Popular

Post Top Ad