நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வு - செப்.10-ல் நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Thursday, August 31, 2023

நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வு - செப்.10-ல் நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு

 

 நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வு - செப்.10-ல் நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு

1115642

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

2023-24-க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.7,500 பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அந்த வகையில், மதிப்பீட்டுத் தேர்வு செப்.10-ம் தேதி நடைபெறும் நிலையில், இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad