எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது- இதுவரையில் 30 ஆயிரம் பேர் விண்ணப்பம் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Wednesday, July 5, 2023

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது- இதுவரையில் 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்


எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது- இதுவரையில் 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது- இதுவரையில் 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்

  • கடந்த ஆண்டைவிட இந்த வருடம் கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரையில் 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை:

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 29-ந்தேதி தொடங்கியது.

கடந்த ஆண்டைவிட இந்த வருடம் கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 500 பேருக்கு மேல் மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.

மாணவ-மாணவிகள் அந்தந்த இடஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று காலை வரையில் 30 ஆயிரம் பேர் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிக்க 10-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

கால அவகாசம் அதற்கு மேல் நீட்டிக்க வாய்ப்பு இல்லை. வருகிற 15-ந்தேதி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. அதனால் மாணவர்கள் தாமதமின்றி உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து சீட் மேட்ரிக்ஸ் தயாரிக்கப்பட்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். அதற்கான பணிகள் நிறைவடைய ஒரு வாரம் ஆகலாம். அதனால் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ கலந்தாய்வு மாத இறுதியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதற்கிடையில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தகுதி சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் கலந்தாய்வுக்கு முன்னதாக சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணைய போர்ட்டலில் பதிவு செய்ய முடியாத நிலை தற்போது உள்ளதால் கலந்தாய்விற்கு முன்னதாக ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதிச்சான்றிதழ் ஒப்படைப்பதில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரையில் 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 59 ஆயிரம் பேர் பணம் கட்டி சமர்ப்பித்தனர்.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad