Header Ads Widget

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வரும் 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாள் விழாவினை கொண்டாட பள்ளி கல்வித்துறை உத்தரவுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வரும் 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாள் விழாவினை கொண்டாட பள்ளி கல்வித்துறை உத்தரவுள்ளது

2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ எதிர் வரும்‌ 15.7.2024 அன்று தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாகக்‌ கொண்டாட உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள அனைத்து பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கும்‌ தகுந்த அறிவுரைகள்‌ வழங்கிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌

மேலும்‌, கல்விக்கண்‌ திறந்த காமராசர்‌ அவர்களின்‌ அரும்பணிகள்‌ குறித்து மாணவர்கள்‌ உணர்ந்திடும்‌ வகையில்‌, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்‌ போட்டி, கவிதைப்போட்டி போன்றவற்றை,திட்டமிட்டு நடத்திடவும்‌, பரிசுகள்‌ வழங்கி ஊக்குவித்திடவும்‌ வேண்டும். இவ்விழாவினை, பள்ளியின்‌ வளர்ச்சி நிதி அல்லது ஒருங்கிணைந்த கல்வித்‌ திட்டத்தின் கீழ் பெறப்படும்‌ மானியத்தைப்‌ பயன்படுத்தி சிறப்பாக நடத்திடவும்‌ பள்ளி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தி அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.



Post a Comment

0 Comments