குற்றாலம் போறீங்களா.. முதலில் இதை செய்யுங்க! ஒரு மெசேஜ் போதும் - அருவி நிலவரம் அப்டேட்டாக வந்துரும் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Wednesday, July 5, 2023

குற்றாலம் போறீங்களா.. முதலில் இதை செய்யுங்க! ஒரு மெசேஜ் போதும் - அருவி நிலவரம் அப்டேட்டாக வந்துரும்


குற்றாலம் போறீங்களா.. முதலில் இதை செய்யுங்க! ஒரு மெசேஜ் போதும் - அருவி நிலவரம் அப்டேட்டாக வந்துரும்

தென்காசி: குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ செல்லும் சுற்றுலா பயணிகள் வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் செய்தால் அருவிகளின் நீர் வரத்து நிலவரங்களை தெளிவாக வழங்கி

ஜூன் மாதம் வந்துவிட்டாலே தமிழ்நாட்டில் சுற்றுலா விரும்பிகளின் நினைவுக்கு முதலில் வருவது குற்றாலம்தான். வாட்டி வதைத்த கோடை வெயிலில் காய்ந்துபோன மக்கள், மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் இருந்து ஜில் ஜில் என கொட்டும் நீரில் குளித்து குதூகளிக்க தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு படையெடுத்து செல்கிறார்கள்

Get whatsapp updates regarding Courtalam falls before travel

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குற்றாலம் சீசன் செமயாக இருக்கும். இந்த மாதங்கள் வந்துவிட்டாலே குற்றாலத்தில் கொண்டாட்டம்தான். கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியவுடன் குற்றாலம் அருவிகளில் சீசன் தொடங்கிவிடும்.

இந்த ஆண்டு ஜூன் தொடக்கத்தில் குற்றாலத்தில் போதிய நீர் வரத்து இல்லை. ஆனால், ஜூன் மாதம் 10 ஆம் தேதிக்கு பிறகு நீர் கொட்டத் தொடங்கியது. ஆனால், இடையிடையே நீர் வரத்து குறைந்தும் அதிகரித்தும் காணப்படுகிறது. தற்போது தென் மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொட்டி வருகிறது

இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து வருகின்றனர். ஆனால், சில அருவிகளில் அளவுக்கு மீறி தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டி வருவதால் பொதுமக்கள் குளிப்பதற்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக குற்றாலத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் பயணிகள் திரும்பிச் செல்கிறார்கள். இவர்களுக்கு உதவும் வகையில் தென்காசியில் ஒரு குழு செயல்பட்டு வருகிறது. தென்காசி லைப் என்ற பெயரில் பேஸ்புக், யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களை நடத்தி வரும் அந்த குழு குற்றாலத்தின் வானிலை, அருவிகள் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறது.

ADVERTISEMENT

"காலை 9 மணி நிலவரப்படி, பேரருவி - தண்ணீர் ஆர்ப்பரிப்பு (குளிக்க அனுமதி), ஐந்தருவி - வெள்ளப்பெருக்கு (குளிக்கத் தடை), புலியருவி - மிதமான நீர்வரத்து (குளிக்க அனுமதி), பழைய குற்றால அருவி - மிதமான நீர்வரத்து (குளிக்க அனுமதி), வானிலை: இதமான சூழல்; மேகமூட்டம்; சாரல்" என்று அந்த தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.

தொடர்ந்து குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பயனுள்ள தகவல்களை வெளியிட்டு வரும் இக்குழுவினர், குற்றாலம் அருவிகளுக்கு நேரில் சென்று குற்றால அருவிகளில் கொட்டும் ஜில் ஜில் தண்ணீரின் வீடியோக்களை சுட சுட வெளியிட்டு, களத்தில் இருந்து அப்டேட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

ADVERTISEMENT

வாட்ஸ் அப்பில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ புதிய முயற்சியை கையில் எடுத்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் பதிவிட்டுள்ளதாவது, "குற்றால சீசனை அனுபவிக்கவரும் நமது Tenkasi Life பேஜ் ஃபாலோவர்ஸின் வசதிக்காக தகவல் மையம் ஒன்றை அமைத்துள்ளோம். 9600753806 என்ற எண்ணுக்கு Courtallam என டைப் செய்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்தால், அன்றைய சீசன் நிலவரம் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்." என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.

 சீசன் ஸ்டார்ட்.. குற்றாலம் போறீங்களா? அருவி மட்டுமில்ல.. பக்கத்துலயே நிறைய அழகான இடங்கள் இருக்கு

ஒருவேளை நீங்கள் குற்றாலத்துக்கு சென்று அருவிகளில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் ஏமாற்றமடைய வேண்டாம். குற்றாலத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. அவற்றை பற்றி நாம் விரிவாக பதிவிட்டு உள்ளோம். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாசியுங்கள்


No comments:

Post a Comment

Popular

Post Top Ad