பான் கார்டு.. வெறும் 110 ரூபாய் கட்டணம்.. ஜஸ்ட் 2 நிமிஷத்தில் இதை செய்துவிடலாம்.. இல்லாட்டி சிக்கல் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Friday, July 7, 2023

பான் கார்டு.. வெறும் 110 ரூபாய் கட்டணம்.. ஜஸ்ட் 2 நிமிஷத்தில் இதை செய்துவிடலாம்.. இல்லாட்டி சிக்கல்

பான் கார்டு.. வெறும் 110 ரூபாய் கட்டணம்.. ஜஸ்ட் 2 நிமிஷத்தில் இதை செய்துவிடலாம்.. இல்லாட்டி சிக்கல்

சென்னை: ஆதார் கார்டு செயலிழந்து விட்டால் எப்படி மீட்க வேண்டும் தெரியுமா? ஆதார் அட்டை போலவே பான் அட்டையும் செயலிழந்துவிடுமா? பான் அட்டையில் தவறு இருந்தால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் தெரியுமா?

ADVERTISEMENT

இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டையை, அடையாள அட்டையாக பயன்படுத்தலாம். பான் போன்ற பிற அடையாள அட்டைகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால், ஆதார் அட்டை மெதுவாக நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே அட்டையாக இன்று மாறியுள்ளது.
ஆதார் அட்டையை அடையாள சான்றாகவும், முகவரி சான்றாகவும், வயது சான்றாகவும், எந்த அரசு பணிக்கும் விண்ணப்பிக்கும் போதும் பயன்படுத்தலாம். அதேபோல, இது அனைத்து அரசு தொடர்பான சேவைகள் மற்றும் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படலாம்

ஆதார் முக்கியத்துவம்: ஆதார் அட்டையின் மிக முக்கியமான பயன்களில் ஒன்று, உரிமையாளருக்கு அவர்/அவள் தகுதியுடைய அனைத்து அரசாங்க மானியங்களையும் பெற இது அனுமதிக்கிறது. பல்வேறு மானியங்கள் அல்லது திட்டங்களைப் பெறுவதற்கு அவர்கள் தங்கள் ஆதார் அட்டையை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கு தொடங்கவும் ஆதார் அடிப்படை தேவையாகிவிட்டது..


PAN card corrections and do you know that your Aadhaar Card also expires how to fix

ஆதார் கார்டு போலவே, பான் கார்டும் தவிர்கக் முடியாதது.. ஆனால், ஆதார் கார்டு போலவே, பான் கார்டுகளும் காலாவதியாகுமா என்ற கலக்கம் பலருக்கு உள்ளது.. இதற்கு அச்சப்படவே தேவையில்லை.. ஒருமுறை பான் கார்டு உருவாக்கப்பட்டால், அது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.. அதை மீண்டும் கட்ட வேண்டிய அவசியமில்லை. அதேசமயம், 2 பான் கார்டு வைத்திருந்தால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது

அதேபோல, பான் கார்டு நம்பரை மாற்ற முடியாது. இருந்தாலும், பான் கார்டில் உள்ளிடப்பட்ட பிற தகவல்களை பான் கார்டு வைத்திருப்பவரால் புதுப்பிக்க முடியும்.

புதிய பான் கார்டு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய

http://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். இப்போது அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள "Application Type" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து 'Changes or Correction in Existing PAN card' என்பதைத் தேர்வு செய்யவும்.

பிறகு, பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை இந்தப் பக்கத்தில் பூர்த்தி செய்யவும். பின்னர் உங்கள் இ-மெயில் எண்ணிற்கு டோக்கன் எண் அனுப்பபடும். அதை சேமித்து வைக்கவும். உங்கள் டோக்கன் எண் இ-மெயிலுக்கு அனுப்பப்படும் என்பதால் இ-மெயில் ஐடி-யை சரியாக கொடுக்க வேண்டும். இதையடுத்து, விண்ணப்ப பக்கம் சென்று அடையாள சான்று, முகவரி சான்று மற்றும் டிஜிட்டல் கையெழுத்து உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.

ADVERTISEMENT

கட்டணம்: விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் எல்லாம் பூர்த்தி செய்தப் பின் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.110 செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பித்தால் உங்கள் பான் கார்டில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அட்டை வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்

No comments:

Post a Comment

Popular

Post Top Ad