தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 1000 பேர் மீது நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது புகார்கள் வந்துள்ள நிலையில், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
புகார்களுக்கு நடவடிக்கை:
தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மீது துறைசார்ந்த புகார்கள் வந்துள்ள நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு புகார்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். குறிப்பாக 17A மற்றும் 17B புகார்கள் அவர்கள் மீது போடப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்கள் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. ஒரு சிலர் தற்போது பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் அவர்களை பணியிடை நீக்கம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் பணியில் இருக்கும் போதே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதனால் அவர்களுக்கு பணியிடை நீக்கம் அல்லது அவர்கள் ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 பேர் மீது புகார் வந்துள்ள நிலையில், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை வேகமாக செய்து வருகிறது.
No comments:
Post a Comment