சென்னை: 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இன்று (ஜூன் 28) முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 2023-24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது.
ஜூலை, 10ம் தேதி மாலை 5:00 மணி வரை, www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்ப பதிவு குறித்த தகவல்கள், இணையதளங்களில் உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த, 19 படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஜூலை 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
0 Comments