TN Higher Education Staffs Job Recruitment 2024

தமிழக அரசின் உயர்கல்வித்துறையில் உதவிப் பேராசிரியர் 4000 பணியிடங்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், ஆகஸ்ட் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும், அதற்காக வரும் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TN Higher Education Staffs Job Recruitment 2024
TN Higher Education Staffs Job Recruitment 2024

தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், “தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த அறிவிப்பின் மூலம் 3 ஆயிரத்து 921 நடப்பு காலிப் பணியிடங்கள் மற்றும் 79 பின்னடைவு காலி பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன