RTO அலுவலகத்திற்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமம் – முழு விவரம் உள்ளே!
ஓட்டுநர் உரிமம்
இந்திய மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஓட்டுநர் உரிமம் இருக்கிறது. பொதுவாக இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் அல்லது கனரக வாகனம் இருந்தாலோ அல்லது இவைகளை இயக்கவோ ஓட்டுநர் உரிமம் பெறுவது கட்டாயம் ஆகும். வழக்கமாக ஓட்டுநர் உரிமம் பெற பிராந்திய போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO அலுவலகம்) செல்ல வேண்டும். ஆனால் இப்போது அங்கே செல்லாமல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும்.
அதாவது உங்களுடைய மொபைல் போன் அல்லது பொதுசேவை மையம் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கு முன் நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பதிவு செய்ய வேண்டும். அங்கு நீங்கள் பயிற்சி பெற வேண்டும். அதன் பின் பள்ளி உங்களுக்கு கற்றல் ஓட்டுநர் உரிம சான்றிதழை வழங்கும். இந்த சான்றிதழ் மூலம் 6 மாதங்களுக்குள் ஓட்டுநர் உரிமம் பெறலாம். பொது சேவை மையம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து கற்றல் உரிமத்திலிருந்து ஓட்டுநர் உரிமத்தை எளிமையாக பெறலாம்.
No comments:
Post a Comment