PCDA SPARSH - PENSION AUG 2023ஆகஸ்ட் மாத ஓய்வூதியம் - 31.08.2023 - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Thursday, August 31, 2023

PCDA SPARSH - PENSION AUG 2023ஆகஸ்ட் மாத ஓய்வூதியம் - 31.08.2023

PCDA SPARSH  -   PENSION AUG 2023
ஆகஸ்ட் மாத ஓய்வூதியம்  - 31.08.2023

சங்க உறுப்பினர்கள் மற்றும் பல மு. ப. வீ கள் ஆகஸ்ட் மாத ஓய்வூதியம் அவர்களது வங்கி கணக்கில் வரவு செய்யப்படவில்லை என சங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டு வருகிறார்கள். 

நானும் இன்று மாலை 5.50 மணிக்கு எனது வங்கி கணக்கு வரவை சரிபார்த்த போது,  PCDA SPARSH  லிருந்து ஓய்வூதியம் வரவு செய்யப்படவில்லை. 

 PCDA SPARSH  லிருந்து 25,98.852 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வரவு செய்யப்படவேண்டும். ஒரேநாளில் ஒரே நேரத்தில்  செய்யப்படும் போது ஓய்வூதிய வரவு தாமதம் ஆகிறது போல் தெரிகிறது. இதே பிரச்சினை மூன்று மாதங்களுக்கு முன்பும் இருந்தது. இது பற்றி  PCDA SPARSH  க்கு புகாரும் அனுப்பப்பட்டது. 

 பல CPPC  களிலிருந்து ஓய்வூதிய வரவு மாதக் கடைசியில் கடைசி நான்கு நாட்களில் ஏதாவது ஒரு நாளில் செய்ததால் எந்த கால தாமததும் இல்லாமல் மாத முடிவிற்கு முன்பே ஓய்வூதியம் வரவு செய்யப்பட்டது. ஆனால் ஓய்வூதிய வரவு என்பது இப்போது அரசு கையில் உள்ளது. அரசைத்தான் கேட்க வேண்டும். 

இன்று இரவுக்குள் ஓய்வூதிய வரவு ஆகாவிட்டால்  PCDA SPARSH  க்கு புகார் அனுப்பப்படும். 

தற்போதைய  6 மணி தகவல் படி  PCDA  சர்வரில் பிரச்சினை உள்ளதாகவும் அது சரிபார்க்கப்பட்டு இன்று இரவுக்குள் ஓய்வூதிய வரவு செய்யப்படும் என தெரியவந்துள்ளது. 

நன்றி 
சுகுமார்

No comments:

Post a Comment

Popular

Post Top Ad