TNPSC Group 4 Cut Off: குரூப் 4 காலியிடங்கள் 10,178 ஆக அதிகரிப்பு; கட் ஆஃப் எப்படி இருக்கும்? - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Monday, July 3, 2023

TNPSC Group 4 Cut Off: குரூப் 4 காலியிடங்கள் 10,178 ஆக அதிகரிப்பு; கட் ஆஃப் எப்படி இருக்கும்?

TNPSC Group 4 Cut Off: குரூப் 4 காலியிடங்கள் 10,178 ஆக அதிகரிப்பு; கட் ஆஃப் எப்படி இருக்கும்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு காலியிடங்கள் அதிகரிப்பு; 


TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களை 10,178 ஆக அதிகரித்துள்ளதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என இப்போது பார்ப்போம்.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடும் நேரத்தில், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்தது.

இதையும் படியுங்கள்: TNPSC 10,292 காலி பணியிடங்கள்

இருப்பினும் தேர்வர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் எனப் பலரும் குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், தேர்வாணையம் குரூப் 4 பணியிடங்களை 10,178 ஆக அதிகரித்து அறிவித்துள்ளது. மேலும் காலியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

குரூப் 4 காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 61 காலியிடங்கள் மட்டும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால், கட் ஆஃப் மதிப்பெண்ணில் பெரிய அளவுக்கு மாற்றம் இருக்காது. ஒரு சில பிரிவுகளுக்கு ஒரிரு மதிப்பெண்கள் குறையலாம். ஏனெனில் ஒரே கட் ஆஃப் மதிப்பெண்ணில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய நிலவரத்தின் படி கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.நிபுணர்களின் கருத்துப்படி, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 163 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 158 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 157க்கு மேலும், SC பிரிவினருக்கு 153க்கு மேலும், BCM பிரிவினருக்கு 151க்கு மேலும், SCA பிரிவினருக்கு 150க்கு மேலும், ST பிரிவினருக்கு 140 க்கு மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2-3 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.ஒட்டுமொத்தமாக இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3-4 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்கள் மற்றும் பெண்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 4-5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. தட்டச்சர் பணியிடங்களுக்கு 5 மதிப்பெண்கள் வரையிலும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு 10 மதிப்பெண்கள் வரையிலும் குறைய வாய்ப்புள்ளது

No comments:

Post a Comment

Popular

Post Top Ad