அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு.. முதல்வர் எடுத்த அதிரடி முடிவு! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Friday, July 14, 2023

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு.. முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு.. முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!
 
25 சதவீதம் சம்பளத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு.. முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!
    

மாநில அரசு ஊழியர்கள் இதைச் செய்யாவிட்டால் அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
சம்பளம் குறைப்பு!
 
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அதிரடியான அறிவிப்பை கேரள மாநில அரசு வெளியிட்டுள்ளது. கேரள மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டையிங் இன் ஹார்னஸ் திட்டத்தின் (Dying in harness scheme) கீழ் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
25 சதவீதம் பிடித்தம்!
 
டையிங் இன் ஹார்னஸ் திட்டத்தின் கீழ் வேலை பெறும் ஊழியர்கள், இறந்தவரின் பிற சார்ந்திருப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் தேவைகளுக்குப் பொறுப்பாவார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பணியாளர்கள் மற்ற சார்ந்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்காவிட்டால், அவர்களின் மாத அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்து, இத்தொகையை தகுதியுடைய மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
புகார் வந்தால் சம்பளம் கட்!
 
டையிங் இன் ஹார்னஸ் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு வேலை கிடைத்து, உணவு, தங்குமிடம், சிகிச்சை மற்றும் பராமரிப்பு தொடர்பான வசதிகளை பிற சார்ந்திருப்பவர்களுக்கு வழங்கவில்லை என்றால், அத்தகைய பணியாளர் மீது நியமன ஆணையத்தில் புகார் அளிக்கலாம். ஊழியருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் அவரது அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அவரைச் சார்ந்தவர்களின் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் டெபாசிட் செய்யப்படும்.

மேல்முறையீடு செய்யலாம்!
 
தாசில்தாரின் விசாரணையில் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் மூன்று மாதங்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம் என்றும், மாவட்ட ஆட்சியர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்குச் சார்ந்திருப்பவர்களுக்கு உரிமை இருந்தால், அவர்களுக்கு தகுதி இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad