வருமான வரி செலுத்திட்டீங்களா.. உங்க வீட்டில் பணம் + தங்க நகை வைத்திருக்கிறீர்களா? அப்ப இதை படிங்க
உங்கள் வீட்டிற்குள் பணம், தங்கநகைகள் வைத்திருக்கிறீர்களா? இதுகுறித்து வருமானவரித்துறை முக்கிய அலர்ட் ஒன்றை தந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில், தமிழ்நாடுதான் முன்னிலையில் உள்ளது என்கிறார்கள்.. இதற்கு காரணம், தங்க நகைகள் மீதான மோகம் பெண்களிடம் இன்னமும் குறையாமல் இருப்பதுதான்
பொதுவாக, தங்கம் நாம் வைத்திருப்பதற்கு எந்த தடையும் இல்லைதான்.. ஆனால், தங்கம் வைத்திருப்பதற்கு சரியான ஆதாரங்களையும், ஆவணங்களையும் நாம் வைத்திருக்க வேண்டும்... அதுவும், ஒரு நபரின் பாலினம் மற்றும் திருமண நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நகையை அவர் வைத்திருக்கலாம்.
பணமதிப்பு:
திருமணமான பெண் 500 கிராம், அதாவது 62.5 சவரன் தங்கத்தையும், திருமணம் ஆகாத பெண் 250 கிராம், அதாவது, 31.25 சவரன் மதிப்புள்ள தங்கத்தை வைத்துக்கொள்ளலாம். திருமணமான மற்றும் திருமணம் ஆகாத என 2 தரப்பு ஆண்களுமே 100 கிராம் எடையுள்ள அதாவது 12.5 சவரன் தங்க ஆபரணங்களையும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வைத்திருக்கலாம்.
மேற்கூறிய அளவு வைத்திருப்பவரின் தங்கத்தை வருமான வரித்துறையினர் சோதனையிடும்போது பறிமுதல் செய்ய முடியாது... ஒருவேளை தங்கம் வைத்திருப்பதற்கு சரியான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் வைத்திருக்கும் பட்சத்தில் தங்கம் வைத்திருப்பதற்கு வரம்பு எதுவும் கிடையாது.. ஆனால், வருமான வரித்துறையின் சோதனையின் போது வரி செலுத்துவோரின் நகைகளை பறிமுதல் செய்வதிலிருந்து விடுவிப்பதற்காக மட்டுமே இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அபராதம்:
தங்கத்தைப் போலவே பணத்திற்கும் வரைமுறை உள்ளது.. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடும்போது, கையிலுள்ள பணம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என ஆதாரங்கள், ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். முறையான ஆவணங்களை காட்டிவிட்டால், பிரச்சனையில்லை.. ஆதாரத்தை காட்ட தவறினால், எவ்வளவு பெரிய தொகையானாலும் பறிமுதல் செய்யப்பட்டுவிடும்.. அத்துடன் 137 சதவீதம் வரை அபராதமும் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
நீங்கள் தங்கத்தை பரிசாகவோ அல்லது பரம்பரையாகவோ பெற்றிருந்தால், அதற்கான ஆவணத்தை நீங்கள் காட்ட வேண்டும். வருமான வரிக்கணக்கிலும் இதை கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு ஆவணமாக, தங்கத்தைப் பரிசளித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ரசீதையும் காட்டலாம்
No comments:
Post a Comment