குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு..! சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!
Courtallam Falls : மலைப்பகுதியில் நள்ளிரவில் இருந்து பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையில் இருந்து சாரல் பெய்து வருகிறது.
தென்காசி, சுரண்டை, சேர்ந்தமரம் ஆகிய பகுதிகளில் காலையிலிருந்து மிதமான அளவில் மழை பெய்து வந்தது.
தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில், ஜூன் மாதம் தொடங்க வேண்டிய குற்றால சீசன் தாமதமாகியிருக்கும் நிலையில் தற்போது தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிதமாக பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாலையில் பெய்த திடீர் மழையால் குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புலி அருவியில் மிதமான அளவு தண்ணீர் விழுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
மழை குறைந்து இதமான சூழல் நிலவும் பொழுது மீண்டும் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments