NExT: அடுத்த ஆண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு; தகுதிகள் என்ன? எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?

MBBS படிப்பில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் NExT (படி 1 மற்றும் 2) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; விதிமுறைகளை அறிவித்தது தேசிய மருத்துவ ஆணையம்

டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) ஜூலை 28 ஆம் தேதி தேசிய வெளியேறும் தேர்வுக்கான (NExT) ஒரு மாதிரி தேர்வை நடத்துவதாக அறிவித்துள்ளது.

நெக்ஸ்ட் (NExT) தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டவுடன், மருத்துவ மாணவர்களுக்கான ஒரு பொதுவான வெளியேறும் தேர்வு இருக்கும், அது ஒரு உரிமம் மற்றும் நுழைவுத் தேர்வாக செயல்படும். NExT தேர்வு படி 1 மற்றும் படி 2 என இரண்டு படிகளில் நடத்தப்படும், மற்றும் விண்ணப்பதாரர்கள் MBBS படிப்பில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) சமீபத்தில் NExT தேர்வுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

நெக்ஸ்ட் தேர்வு எதற்காக?

இந்தியாவில் மருத்துவப் பட்டதாரிகள் நவீன மருத்துவ முறையைப் பயிற்சி செய்ய பதிவு செய்வதற்கான தகுதியை சான்றளிக்க தேசிய வெளியேறும் தேர்வு (NExT) நடத்தப்படும். இது ஒரு உரிமத் தேர்வாக இருக்கும்.

முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் தரத்தை இது தீர்மானிக்கும் மற்றும் இந்தியாவில் முதுகலை மருத்துவக் கல்விப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகவும் செயல்படும்.

2023 இல் NExT தேர்வு நடக்குமா?

NExT தேர்வு 2024 ஆம் ஆண்டு பேட்ச் தேர்ச்சியுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி டெல்லி AIIMS மூலம் ஒரு மாதிரி தேர்வு நடத்தப்படும், அதற்கான பதிவு செயல்முறை நடந்து வருகிறது மற்றும் ஜூலை 10 ஆம் தேதி முடிவடையும்.

இந்த மாதிரித் தேர்வில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கணினி அடிப்படையிலான தேர்வுக்கு (CBT) நாடு முழுவதும் மையங்கள் அமைக்கப்படும். மாதிரித் தேர்வுக்கான பதிவுக் கட்டணம் பொதுப்பிரிவு மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு ரூ. 2,000, SC, ST, EWS பிரிவு மாணவர்களுக்கு ரூ. 1,000, அதே சமயம் மாற்றுத்திறனாளிகள் (PwBD) பிரிவின் கீழ் உள்ள மாணவர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை.

NExT தேர்வுக்கு தகுதியானவர் யார்?

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் (INI) உட்பட தேசிய மருத்துவ ஆணையத்தால் (NMC) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ் (MBBS) படிக்கும் அனைத்து இளங்கலை மருத்துவ மாணவர்களும் NExT தேர்வை எழுத வேண்டும்.

இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளராக மருத்துவப் பயிற்சி பெறுவதற்கான உரிமத்தைப் பெறுவதற்கும் மாநில அல்லது தேசிய பதிவேட்டில் பதிவு செய்வதற்கும் NMC இன் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி உரிம விதிமுறைகளின் தேவையை பூர்த்தி வேண்டிய அனைத்து வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளும் (FMG) நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டும்.

கல்விப் படிப்பு, கண்காணிப்பு அல்லது NMC ஆல் உரிய அறிவிப்பு மூலம் குறிப்பிடப்பட்ட வேறு எந்த நோக்கத்துடன் மருத்துவப் பட்டம் பெற்ற எந்தவொரு நபரும் நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும். தேசிய அல்லது மாநில பதிவேட்டில் பயிற்சி மற்றும் பதிவு செய்ய மருத்துவ உரிமம் பெற்றவர்கள், பரந்த சிறப்பு முதுகலை படிப்புகளை தொடர விரும்பும் அனைவரும் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டும்.

NExT தேர்வில் எத்தனை முயற்சிகள் உள்ளன?

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, “எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் NExT படி 1 மற்றும் NExT படி 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், NExT படி 1 இல் தோன்றுவதற்கான முயற்சிகளின் எண்ணிக்கைக்கு எந்த தடையும் இல்லை. மதிப்பெண்களை மேம்படுத்துவதற்கான NExT படி 1 தேர்வில் தோன்றுவதற்கான முயற்சிகளின் எண்ணிக்கையில் எந்த தடையும் இல்லை, இந்த தேர்வுகளை NExT 2 முடிந்தப் பிறகு எழுதலாம். NExT 2 முடிவடையும் வரை மதிப்பெண்களை மேம்படுத்த NExT படி 1 தேர்வை எழுத முடியாது”.

NExT 1 தேர்வு எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?

பரந்த சிறப்பு முதுகலை படிப்புகளில் சேருவதற்கான தகுதியை நிர்ணயம் செய்வதற்கான NExT படி 1 மதிப்பெண்கள் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இருப்பினும், ஒரு தேர்வர் மீண்டும் NExT படி 1 இன் தேர்வு சுழற்சியில் தோன்றினால், பரந்த சிறப்பு முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசையை நிர்ணயிப்பதற்கு முந்தைய NExT படி 1 மதிப்பெண்கள் செல்லாது, மேலும் NExT படியின் கடைசி முயற்சியில் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

நீங்கள் NExT 2 இல் தோல்வியடைந்தால் என்ன நடக்கும்?

ஏழு பாடங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்து, பாடங்களைத் திரும்பத் திரும்ப எழுத வேண்டிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே NExT படி 2 துணைத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். எவ்வாறாயினும், ஒரு தேர்வர் மூன்று பாடங்களுக்கு மேல் தோல்வியடைந்திருந்தால், அவர்கள் மீண்டும் ஏழு பாடங்களையும் எழுத வேண்டும்.

“MBBS படிப்பில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் NExT படி 1 மற்றும் NExT படி 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், NExT படி 2 இல் தோன்றுவதற்கான முயற்சிகளின் எண்ணிக்கைக்கு எந்த தடையும் இல்லை” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூறுகிறது.

நெக்ஸ்ட் தேர்வுக்கான 10 ஆண்டு விதி என்ன?

NMC ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் இருந்து 3 ஆம் ஆண்டு MBBS/ இறுதி ஆண்டு MBBS படிப்பை முடித்த மாணவர்கள் NExT படி 1 தேர்வை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவுடன், அவர்கள் NExT படி 2 க்கு தோன்றுவதற்கு ஒரு இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும். விதிமுறைகளின்படி, விண்ணப்பதாரர்கள் MBBS படிப்பில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் NExT (படி 1 மற்றும் 2) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்