குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000! எப்படி விண்ணப்பிக்கலாம்! ஆதார், ரேஷன் கார்டு இல்லைனா என்ன செய்யணும் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Friday, July 7, 2023

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000! எப்படி விண்ணப்பிக்கலாம்! ஆதார், ரேஷன் கார்டு இல்லைனா என்ன செய்யணும்

 குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000! எப்படி விண்ணப்பிக்கலாம்! ஆதார், ரேஷன் கார்டு இல்லைனா என்ன செய்யணும்

 

சென்னை: தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செப். மாதம் அமல்படுத்தப்படும் நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் எப்படிப் பெறப்படும் என்பது குறித்து முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைந்தது முதலே இத்திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்பதே பலரது கேள்வியாக இருந்தது.

எதிர்க்கட்சிகளும் கூட இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது. இந்தச் சூழலில் தான் இந்தாண்டு பட்ஜெட்டில் மகளிருக்கு 1000 ரூபாய் என்பது வரும் செப். முதல் வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பைத் தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்டார்.

ஸ்டாலின்: இது குறித்துத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்தச் சூழலில் மாவட்ட கலெக்டர்கள் உடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் செப். 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது என்றும் அப்போது முதல் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.


மேலும், இதற்கு முத்தமிழ் அறிஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்திற்காகக் கடந்த பட்ஜெட்டில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இன்று இத்திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஒவ்வொரு துறையின் பங்களிப்பு குறித்தும் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்புகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது


சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய காலக்கெடுவுக்குள் இதற்கான அனைத்து பணிகளும் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் இத்தனை பெரிய திட்டம் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறை. இதைச் சிறப்பாகச் செயல்படுத்த மாவட்ட தலைவர்களான ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டம் அண்ணாவின் பிறந்த நாளான செப். 15ஆம் தேதி செயல்படுத்தப்படுகிறது. அதற்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு இந்தத் திட்டம் வெற்றி பெற உதவ வேண்டும்.


எப்படி விண்ணப்பிக்க வேண்டும்: 1.5 கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும் உரியப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் சாலைகளில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மை பணியாளர்கள், ஆதரவற்றோர் இதில் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும்.

இவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை இல்லையென்றாலும் அதைப் பெறுவதற்கும் இந்தத் திட்டம் கிடைக்கவும் உதவி செய்ய வேண்டும். தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவில் இந்தத் திட்டத்தைக் கண்காணித்து ஒருங்கிணைக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழு இதற்கான பணிகளைச் செய்யும். இதன் மூலம் மாநிலத்தில் இருக்கும் பெண்களின் நிதி நிலை மாறும்" என்று அவர் தெரிவித்தார்.


அதாவது மகளிருக்கான உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ரேஷன் கடைகள் மூலம் பெறப்படும் என்பதை முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தகுதியுள்ள பயனாளிகள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை இல்லை என்று விண்ணப்பித்தால் அதற்கு உரிய முக்கியத்துவம் தரவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் சென்னை செய்திகள் 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. ஆவணங்கள் இல்லாத இல்லத்தரசிகளுக்கும் ரூ. 1000.. முதல்வர் அறிவிப்பு


அரசு ஊழியர்களுக்கு "ஜாக்பாட்" வருது.. ஒரேடியா எகிறும் சம்பளம்.. ஒரே கல்லுல 2 மாங்கா.. வேறலெவல் ப்ளான்


புதிய கல்விக் கொள்கை ஏன் வேண்டும் தெரியுமா? மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடுத்த புது விளக்கம்!


வந்தாச்சு வந்தே பாரத் ஸ்லீப்பர் வெர்ஷன்! அடடே இவ்வளவு சீக்கிரமாவா.. வேற லெவலில் மாறும் ரயில் பயணம்


2 ரிப்போர்ட்.. 3வது நீதிபதியிடம் துஷார் மேத்தா வாதம்.. என்.ஆர்.இளங்கோ கோரிக்கை ஏற்பு! என்ன நடந்தது?


சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க ஆசையா? நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா?




 


No comments:

Post a Comment

Popular

Post Top Ad