எம்.பி.ஏ படிப்பை தொலைநிலையில் நடத்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு அனுமதி.* - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Sunday, June 25, 2023

எம்.பி.ஏ படிப்பை தொலைநிலையில் நடத்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு அனுமதி.*

*எம்.பி.ஏ படிப்பை தொலைநிலையில் நடத்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு அனுமதி.*


முதுநிலை வணிக நிா்வாகம் (எம்.பி.ஏ) பட்டப்படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்த தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.க்கு அகில இந்திய தொழில்நுட்ப மாமன்றம் (எ.ஐ.சி.டி.இ) ஐந்து வருடத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக நிா்வாகம் (எம்பிஏ) படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்த அனுமதி கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப மாமன்றத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

இந்த கோரிக்கையின்படி அகில இந்திய தொழில்நுட்ப மாமன்றம் மே 20-ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்கள் மற்றும் பல்கலை.யின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தது.

 அப்போது, அனைத்து விதங்களிலும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தகுதி வாய்ந்ததாக இருப்பதை உறுதி செய்தது.

 இதைத்தொடா்ந்து முதுநிலை வணிக நிா்வாகப் பட்டப்படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்த 2023-2024 முதல் 2027-2028-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

என அவா் தெரிவித்துள்ளாா்.


No comments:

Post a Comment

Popular

Post Top Ad