ஆதார் கார்டு.. அதுல உங்களுடைய நம்பர் ஞாபகம் இருக்கா.. இதோ இப்படிதான் அதை கண்டுபிடிக்கணும்.. - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Saturday, May 6, 2023

ஆதார் கார்டு.. அதுல உங்களுடைய நம்பர் ஞாபகம் இருக்கா.. இதோ இப்படிதான் அதை கண்டுபிடிக்கணும்..

ஆதார் கார்டு.. அதுல உங்களுடைய நம்பர் ஞாபகம் இருக்கா.. இதோ இப்படிதான் அதை கண்டுபிடிக்கணும்.. 

excellent information and how to know your mobile number linked with aadhaar card


 ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட உங்களுடைய மொபைல் எண் நினைவிருக்கிறதா? அதை எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா?

ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.. எங்கே செல்வதானாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டுவது அவசியமாகிறது..

அடையாள அட்டைகளை கூட பாக்கெட்டில் எடுத்து செல்ல வேண்டியிருந்தது... ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன... முக்கிய ஆவணங்களை சாஃப்ட் காப்பி வடிவில் செல்போனிலேயே வைத்துக்கொள்ள முடியும்

ஆவணங்கள்:
 அதாவது, ஆவணங்களை, டிஜிட்டல் வடிவத்தில் இருப்பதை அரசே அனுமதி அளிக்கிறது... ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வடிவத்திலும் அவைகள் இருக்க வேண்டும்... ஆதார் அட்டை , பான் கார்டு , டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை இப்போது ஸ்மார்ட்போனிலேயே பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மேலும், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கார்களை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்தியஅரசு..

அதேபோல, ஆதார் கார்டில் எந்த மொபைல் நம்பர், மின்னஞ்சல் இணைக்கப்பட்டுள்ளது, என்பது குறித்து பலரும் அறியாமல் இருக்கின்றனர்.. அதாவது, ஆதார் சரிபார்ப்பு செய்யும்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது ஈமெயில் ஐடியில் பயனர் சரிபார்ப்பு குறியீடு அனுப்பப்படும்... அதை வைத்தே ஆதாரில் அப்டேட் செய்ய முடியும்...

சரிபார்ப்பு: 
ஆனால், நம்மில் பலருக்கு எந்த மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைத்தோம் என்பதை மறந்திருப்போம்.. ஏனெனில், ஆதார் நமக்கு முதன்முதலில் வழங்கப்பட்ட போது பழைய செல்போன் நம்பரை வைத்திருப்போம்.. நிறையப் பேர் அந்த நம்பரையே மாற்றியிருப்பார்கள்.. சிலரிடம் அந்த செல்போன் நம்பர் இருந்திருக்காது.. இதையும் ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியுமாம்.. அதற்கான புதிய அப்டேட்டை UIDAI இப்போது வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் வசதி: ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கண்டுபிடிக்கவே இந்த புதிய சேவையாகும்..

 முதலாவதாக UIDAI ன் அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று, எனது ஆதார் விருப்பத்தை என்பதை கிளிக் செய்ய வேண்டும்... அடுத்ததாக, Verify Mobile/Aadhaar என்பதை கிளிக் செய்து மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்த்து கொள்ளலாம். மேலும், ஆதார் அட்டை பயனர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியை ஆதாருடன் இணைக்க விரும்பினால், உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று அதையும் செய்துகொள்ளலாம்..!!

No comments:

Post a Comment

Popular

Post Top Ad