Header Ads Widget

அரசாங்கத்தின் முதல் டாக்சி.. பாரத் டாக்ஸி செயலி வருகிறது.. இந்த 3 வசதியும் இருக்கே! செம மத்திய அரசு

அரசாங்கத்தின் முதல் டாக்சி.. பாரத் டாக்ஸி செயலி வருகிறது.. இந்த 3 வசதியும் இருக்கே! செம மத்திய அரசு 

சென்னை: எரிபொருள் மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை, பல மடங்கு உயர்ந்து விட்டது.. ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைத்து, 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் வகையிலான மகிழ்ச்சி செய்தி ஒன்று டெல்லியில் இருந்து விரைவில் வரப்போவதாக கூறப்படுகிறது.. இந்த அறிப்பானது, ஓலா, ஊபர் போன்ற தனியார் டாக்ஸிகளுக்கு கிலியை தந்து கொண்டிருக்கிறது.

சமீப காலமாகவே, வெளியிடங்களுக்கு செல்ல வேண்டுமானால் ஓலா, ஊபர் போன்ற டாக்ஸிகள் பொதுமக்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன..

நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்தில் செல்லமுடியும் என்ற வசதி இந்த டாக்ஸியில் கிடைப்பதால், இதற்கு பேராதரவு கிடைத்துவருகிறது.. ஆனால், பயண தூரத்திற்கு, நிரந்தர கட்டணம் இல்லை என்பதால், தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில், பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், பயணியர் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் மழை நேரத்தில், இவர்கள் கேட்கும் கட்டணத்தை தர முடிவதில்லை..

பாரத் டாக்ஸி அறிமுகம்

இதுபோன்ற தனியார் டாக்ஸிகளின் சேவைகளின் அதிகரிப்பால், அதிக கட்டணம், தன்னிச்சையான செயல்பாடுகள் பெருகி வருகின்றன.தனியார் துறையின் இந்த கெடுபிடிகளுக்கு ஒரு கடிவாளத்தை போடுவதற்காகவே, மத்திய அரசு புதிய முறையை கொண்டு வந்துள்ளது..

ஆம், நாட்டிலேயே அரசாங்கத்தால் நடத்தப்படும் முதல் டாக்ஸி சேவையை, பாரத் டாக்ஸி என்ற பெயரில் அறிமுகப்படுத்த போகிறது. நாடு முழுதும் ஒரே செயலியில் பதிவு செய்து, குறைந்த கட்டணத்தில், பொதுமக்கள் பயணிக்க வசதியாகவே இந்த பாரத் டாக்ஸி உருவாக்கப் பட்டுள்ளது.

முதல் அரசு டாக்ஸி அறிமுகம்

இதற்கான சோதனை தற்போது நடந்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில், டெல்லியில் இந்த டாக்ஸி அறிமுகம் செய்யப்பட உள்ளது.,. இதற்கு பிறகு படிப்படியாக மற்ற நகரங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக இதில் 600 டிரைவர்கள் இணைவார்கள் என்றும், டிசம்பர் மாதத்திற்குள், நாடு தழுவிய அளவில் 5,000 ஓட்டுநர்களாக இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் டெல்லி தரப்பில் கூறப்படுகிறது.

Bharat Taxi App - 3 வசதிகள்

இதன் அதிகாரப்பூர்வ செயலி கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் (Apple App Store) ஸ்டோரில் கிடைக்கிறது. பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பெயர், இ மெயில் முகவரி, செல்போன் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து பயன்படுத்தலாம்.

Bharat Taxi App -ஐ டவுன்லோடு செய்துதமே, அதில், "Sign up" செய்து, உங்கள் பெயர், இ-மெயில் முகவரி, போன் நம்பர், பாஸ்வேர்டு போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்..

பிறகு உங்களுக்கு வரும் OTP நம்பரை பதிவிட்டு, கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும். இதன்மூலம் இந்த செயலியில் லாக் இன் செய்து கொள்ளலாம்.

8 மணிநேரம் வரை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் Rentals ஆப்ஷன் இதில் உள்ளது.. நகரத்திற்கு வெளியே பயணிக்க Outstation ஆப்ஷனும் இதில் உள்ளது.. அருகிலுள்ள இடங்களுக்கு பயணிக்க, Local Transfer ஆப்ஷனும் இதில் உள்ளது. இந்த 3 வசதிகளில் எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஊபர், ஓலா

Local Transfer ஆப்ஷனில் பிக்அப், டிராப்-ஆஃப் இடத்தைத் தேர்ந்தெடுத்து, Confirm Booking செய்து, பிறகு Book Now என்று உறுதிப்படுத்தினால் போதும்.இந்த செயலி மட்டும் நடைமுறைக்கு வந்துவிட்டால், பொதுமக்களுக்கு கூடுதல் பலனை நிச்சயம் தரும்.. அரசு கொண்டு வரும் இந்த அதிரடியானது, ஓலா, ஊபர்களின் வயிற்றில் இப்போதே புளியை கரைக்க துவங்கி விட்டது.



Post a Comment

0 Comments