Header Ads Widget

பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புகள்: ஏப்.3-ம் தேதி தொடக்கம்

 பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புகள்: ஏப்.3-ம் தேதி தொடக்கம்

1220545

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2மாணவர்களுக்கு உயர்கல்விக் கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 3 முதல் 15-ம்தேதி வரை நடைபெற உள்ளன.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:


உயர்கல்வி வாய்ப்பு, படிப்பு: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாக ஏப்.3 முதல் 15-ம் தேதிவரை உயர்கல்விக்கான வழிகாட்டுதல் குறித்த வகுப்புகள் நடைபெறவுள்ளன.


இதை முழுமையான வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமைஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்தப்பயிற்சியில் உயர்கல்வி சேர்க்கைக்கான பாட வல்லுநர்களின் நேரடி வழிகாட்டுதல்கள், காணொலிகள் மூலம் பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகள், படிப்புகள் குறித்த தகவல்கள் வழங் கப்பட உள்ளன.


எனவே, பள்ளிகளில் உள்ளஉயர்தொழில்நுட்ப ஆய்வகங் களை முறையாகப் பராமரித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது

Post a Comment

0 Comments