புதிய பரிணாமத்தில் கூகுள் மேப்ஸ்! - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Monday, February 5, 2024

புதிய பரிணாமத்தில் கூகுள் மேப்ஸ்!


cdsafeaf.JPG?w=360&dpr=3

கூகுள் நிறுவனம் தனது 'கூகுள் மேப்ஸ்' (Google maps) சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. தனது எல்லா சேவைகளிலும் செய்யறிவு தொழில்நுட்பத்தை உட்புகுத்தும் கூகுள், கூகுள் மேப்ஸிலும் ஏஐ வசதியை இணைக்கவுள்ளது.  

இதுவரை கூகுள் மேப்ஸ்-ல் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேடினால் அந்த இடம் குறித்த தகவல்களும், வழிகளும் கிடைக்கும். ஆனால் கூகுள் மேப்ஸ்-ன் இந்த செய்யறிவு தொழில்நுட்பத்துடனான பரிணாமத்தில் நீங்கள் உரையாடல்கள் மூலம் இடங்கள் குறித்த தகவல்களைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உதாரணத்திற்கு 'எனக்கு மஞ்சள் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உணவகத்திற்கு செல்ல வேண்டும்' எனக் கூறினால் அதற்கேற்ற அருகாமையில் உள்ள இடங்களைக் காட்டுகிறது. ஒரு கேள்வியோடு நின்றுவிடாமல் உரையாடல்போல் உங்களது தேடல் குறித்த கூடுதல் விவரங்களை இனி கூகுள் மேப்ஸ்-ல் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூகுள், தனது லார்ஜ் லேங்குவேஜ் மாடல்களுக்கு (LLM) 250 மில்லியன்களுக்கும் அதிகமான இடங்கள் குறித்த தகவல்களைக் கொண்டு பயிற்சி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறது

No comments:

Post a Comment

Popular

Post Top Ad