பட்டா மாறுதல்.. அதுவும் ஆன்லைனில் இவ்ளோ வசதியா? தமிழக அரசின் அதிரடி.. படக்னு முளைச்சிருச்சே சிக்கல் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Wednesday, January 3, 2024

பட்டா மாறுதல்.. அதுவும் ஆன்லைனில் இவ்ளோ வசதியா? தமிழக அரசின் அதிரடி.. படக்னு முளைச்சிருச்சே சிக்கல்

பட்டா மாறுதல்.. அதுவும் ஆன்லைனில் இவ்ளோ வசதியா? தமிழக அரசின் அதிரடி.. படக்னு முளைச்சிருச்சே சிக்கல்

சென்னை: பொதுமக்கள் வசதிக்காகவும், நன்மைக்காகவும், பட்டா மாறுதல் செய்வதற்கான அதிரடிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், புது கோரிக்கை ஒன்று அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.


பட்டா என்பது வீடு, நில உரிமையாளர்கள் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணமாகும். ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டும் இந்த ஆவணத்தை வருவாய் துறை வழங்குகிறது... இதில், வீடு உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்

மாறுதல்கள்: நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பிறகு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் "எங்கிருந்தும் எந்நேரத்திலும்" என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை தொடங்கி வைத்திருந்தார்..

இணையதளம்: பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in/citizen/என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தொடங்கி வைத்திருந்தார்

ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் தேவையில்லாமல் அலைய தேவையில்லை... நேரம் மிச்சமாகும்.. சரியான ஆவணங்களை வழங்குவதால், உடனடியாக பட்டா மாறுதலும் உடனடியாக செய்யப்படும். இதில் இடைத்தரகர்களுக்கும் வேலையில்லை.

புகார்கள்: ஆனால், இணையவழியில் பட்டா பெயர் மாற்றம் மற்றும் உட்பிரிவு விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் புகார்கள் கிளம்பி உள்ளது.. அதாவது "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தினால், இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்வதிலும், அதன் நிலவரம் தெரிந்து கொள்வதிலும் குழப்பம் ஏற்படுகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக, உட்பிரிவு தேவைப்படும் விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லையாம்.. அப்படியே பதிவு செய்தாலும், அதன் நிலவரம் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

கோரிக்கை: இதற்கான இணையதளத்தை அணுகினாலும், "மக்களுடன் முதல்வர்" திட்ட விண்ணப்ப எண் கேட்கப்படுவதாகவும், இதனால், வீடு வாங்கியவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும, இது தொடர்பான நடவடிக்கையை வருவாய் துறை அதிகாரிகள், உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்கனவே, இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் பட்டா விண்ணப்பம் செய்வதற்கு கால விரயம் ஏற்படுவதாக புகார்கள் கிளம்பின.. அதுமடுமல்ல, சரியான ஆவணங்கள் அங்கு கொண்டு செல்லாவிட்டால், சில நேரங்கள் பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்ய ஒரு நாள் கூட ஆகிவிடுகிறதாம். அதனால்தான், இந்த குறைபாடுகளை எல்லாம் களைய மக்களுடன் முதல்வர் திட்டம் கொண்டுவரப்பட்டது

இதிலும் சில புகார்கள் எழ துவங்கி உள்ளதால், பொதுமக்களின் அதிருப்தியை போக்க, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டா மாறுதலுக்கான ஆவணங்கள் என்னென்ன தெரியுமா? (இதில் ஏதாவது ஒன்று):

கிரையப் பத்திரம்
செட்டில்மெண்ட் பத்திரம்
பாகப்பிரிவினை பத்திரம்
தானப்பத்திரம்
பரிவர்த்தணை பத்திரம்
விடுதலை பத்திரம்

ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை குடியிருப்பு ஆவணங்கள் (ஏதாவது ஒன்று) ஆதார் அட்டை, தொலைப்பேசி ரசீது, மின் கட்டணம், சமையல் எரிவாயு ரசீது, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை

எப்படி பட்டா மாற்றுவது: முதலில் www.tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்திற்குள் சென்றதுமே, உங்களது பெயர், செல்போன் நம்பர், இ-மெயில் அட்ரஸ் தந்து பதிவு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

- பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டியது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

- உங்களது சுயவிவரங்களையும், நிலத்தின் விவரங்களையும் பதிவிட வேண்டும். அதாவது, அது எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே நம்பர் மற்றும் சப்-டிவிஷன் நம்பர் என பிழையில்லாமல் பதிவு செய்ய வேண்டும்.

- சம்பந்தப்பட்ட நிலம் உங்களுக்கு சொந்தமானதற்கு என்ற சான்றான, கிரைய பத்திரம் உள்பட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக, உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு வரிகள் இல்லாமல் ரூ.60-ம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

- இப்போது உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படும்... அவர் மூலம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்யப்படும்..!!

No comments:

Post a Comment

Popular

Post Top Ad