UGC NET 2024 தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் அமல் – புதிய திட்டம்
UGC NET 2024 தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் அமல் – புதிய திட்டம் ஆலோசனை!
பல்கலைக்கழக மானிய குழுவின் நெட் தேர்வுகளுக்கான அடுத்த ஆண்டு தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்த உள்ளது குறித்து ஆலோசனையில் நடந்து வருகிறது.
புதிய பாடத்திட்டம்:
யுஜிசி நெட் தேர்வு நடப்பு ஆண்டுக்கு டிசம்பர் 6ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனுமதி சீட்டுகள் வெளியிடப்பட்டு தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். யுஜிசி நெட் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் 83 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. பல்கலைக்கழக மானிய குழுவின் பாடத்திட்டங்களை மேம்படுத்தும் செயல்முறை தொடங்கியுள்ளது.
நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற்ற யூஜிசி கூட்டத்தில் பாடத்திட்டங்களை திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக யுஜிசி ஒரு நிபுணர் குழுவை அமைத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இதன் மூலம் பழைய பாடத்திட்டத்தின் படி நடக்கும் இறுதி தேர்வு நடப்பு ஆண்டு தேர்வு தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment