வீட்டில் இதற்கு மேல் பணம் இருந்தால் 137% அபராதம்: வருமான வரி விதியை தெரிந்துகொள்ளுங்கள்
Income Tax Rules: கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த, பணப் பரிவர்த்தனை தொடர்பாக அரசு பல விதிகளை வகுத்துள்ளது. உலகின் பல விதமான மக்கள் வாழ்கிறார்கள். சிலரிடம் அடுத்த வேளை உணவுக்கே பணம் இருப்பதில்லை. சிலர் மிக அதிக செல்வச்செழிப்புடன் வாழ்கிறார்கள். இவர்களிடம் வீட்டிலும் எப்போதும் பணம் நிறைந்திருக்கும். ஆனால் ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்? வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா? இதை பற்றி இந்த பதிவில்
இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் சகாப்தம். மக்கள் அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், பணத்தைப் பயன்படுத்தும் நபர்களும் இன்னும் அதிகம் உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க சட்டம் அனுமதிக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ஆனால்...
வருமான வரிச் சட்டம் வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கு எந்த வரம்பும் விதிக்கவில்லை. வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். வீட்டில் பணத்தை வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல, ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. உங்களிடம் இருக்கும் மொத்த பணமும் உங்கள் முறையான வருமானத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இது கணக்கில் வராமல் இருக்கக் கூடாது. உங்கள் இடத்தில் வருமான வரித் துறையின் சோதனை நடந்தால் அந்த பணத்தின் ஆதாரத்தை நீங்கள் காட்ட வேண்டும். இதை உங்களால் செய்ய முடியவில்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது நிச்சயம். அதாவது எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அது கருப்புப் பணமாக இருக்கக் கூடாது, கணக்கில் வராமல் இருக்கக் கூடாது. இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது, என்ன ஆதாரம் என்பதற்கான நியாயமான பதில் உங்களிடம் இருக்க வேண்டும்.
கணக்கில் வராத பணம் கிடைத்தால்...
பலர் தங்கள் வீடுகளில் அதிக பணத்தை வைத்திருக்கிறார்கள். சிலருக்கு இது ஒரு பொழுதுபோக்காகவும் மற்றவர்களுக்கு கட்டாயமாகவும் இருக்கும். ஒரு தொழிலதிபர் வீட்டில் அதிக பணம் இருப்பது பெரிய விஷயமல்ல. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு அல்லது அவரது வசதிக்கேற்ப அவர் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்கிறார். மீண்டும் பணம் வரும், இது ஒரு சுழற்சியை போல் நடக்கும். ஆனால் இதற்கான முறையான ஆவணங்கள் இருப்பது அவசியம். உங்கள் வீட்டில் ஐடி (Income Tax) ரெய்டு நடந்து அதில் ஏராளமான பணம் கிடைத்தால், அதன் முறையான ஆதாரத்தை அதிகாரிகளிடம் கூறவோ, திருப்திகரமான பதிலைக் கூறவோ முடியாமல் போனால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது. அத்தகைய சூழ்நிலையில், வருமான வரிக் குழு அந்த கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்யும். மேலும் உங்களுக்கு 137 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
பண பரிவர்த்தனை தொடர்பான இந்த முக்கியமான விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
ஒருவரிடம் அதிக பணம் இருந்தால் அது கருப்பு பணம் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால் அதிக பணம் எப்போதும் கருப்புப் பணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆம், கறுப்புப் பண வர்த்தகம் (Cash Transaction) பெரும்பாலும் பணமாக மட்டுமே நடைபெறுகிறது என்பது உண்மைதான். கருப்பு பணத்தை கட்டுப்படுத்த பண பரிவர்த்தனை தொடர்பாக பல விதிகள் உள்ளன. அத்தகைய விதிகளைப் பார்ப்போம்
- வீட்டில் கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டால், 137 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.
- ஒரு நிதியாண்டில் அதாவது ஏப்ரல் முதல் மார்ச் வரை 20 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனை செய்ய முடியாது. அத்தகைய சூழ்நிலையில் அபராதம் விதிக்கப்படலாம்.
- ஒருவர் ஓராண்டில் ரூ.20 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அவர் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை விவரங்களை அளிக்க வேண்டும்.
- ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்து, பான், ஆதார் தகவல்களை வழங்காமல் இருந்தால் ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
- பான் எண் கொடுக்காமல், ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யவோ, எடுக்கவோ முடியாது.
- 2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணம் கொடுத்து பொருட்களை வாங்க முடியாது
- 2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வாங்கினால், பான் மற்றும் ஆதார் அட்டையின் நகலை வழங்க வேண்டும்.
- ஒரு நாளில் உங்கள் உறவினர்கள் எவரிடமிருந்தும் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வாங்க முடியாது. இதற்கு வங்கி மூலம் பரிவர்த்தனை செய்வது அவசியம்
No comments:
Post a Comment