SSC GD Recruitment 2023 - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Wednesday, November 29, 2023

SSC GD Recruitment 2023

SSC GD Recruitment 2023 

 தேர்வர்களுக்கு 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு இணையான மத்திய அரசு வெளியுட்டுள்ள 26146 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்

‘‘மத்திய ஆயுத படைகளில் (CAPFs) காலியாக உள்ள  காவலர் (பொதுப் பணி) மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில்  காலியாக உள்ள தலைமையாக காவல் படை மற்றும் ரைபிள் மேன்(பொதுப் பிரிவு) தேர்வு பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கையின் மூலம் 26146 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

SSC GD Recruitment 2023 Highlights

நிறுவனம்மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வேலை வகைமத்திய அரசு  வேலைகள்
பதவிகாவலர் (பொதுப் பணி)
கல்வித் தகுதி10th
பணியிடம்All Over India
அறிவிப்பு தேதி24.11.2023
கடைசி

தேதி

31.12.2023
விண்ணப்ப முறைOnline

 

SSC GD Recruitment 2023
SSC GD Recruitment 2023

SSC GD Recruitment 2023 Educational Qualifications

காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள்: 26,146 காலிப் பணியிடங்கள்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் மூலம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் (equivalent education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01-01-2024 அன்று வயது 18க்கு மேலும், 23க்கு கீழும் இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை சலுகை அளிக்கப்படும். ஓபிசி பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடைவர்கள்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, விரிவான மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளில் தேர்வு முறை இருக்கும். எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலும், ஆயுதப் படைகளின் விருப்பங்கள் படியும் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை பெற தகுதியுடைவர்கள். ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.100 தேர்வுக் கட்டணத்தை கட்டாயமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? :

How to Apply for SSC GD Recruitment 2023?
  • Step 1 – முதலில் https://ssc.nic.in/ என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • Step 6 – தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
முக்கிய தினங்கள்
விண்ணப்பம் துவங்கும் நாள்25.11.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்24.12.2023
SSC GD Recruitment 2023 Notification & Application Link:
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவும்Click here

No comments:

Post a Comment

Popular

Post Top Ad