தமிழகத்தில் புகைப்படம் இல்லாத பழைய சாதி சான்றிதழ் செல்லாதா? அதிகாரிகள் விளக்கம் - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Wednesday, November 29, 2023

தமிழகத்தில் புகைப்படம் இல்லாத பழைய சாதி சான்றிதழ் செல்லாதா? அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் புகைப்படம் இல்லாத பழைய சாதி சான்றிதழ் செல்லாதா? அதிகாரிகள் விளக்கம்

சென்னை: பழைய சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் புகைப்படம் இல்லாத ஜாதி சான்றிதழ்கள் செல்லாது என்றும் சிலர் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வருகிறார்கள். இது குறித்த அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


Officials explain that old caste certificate without photo will be accepted in Tamil Nadu
இந்நிலையில் சாதி சான்றிதழ்களில் புகைப்படம் இருந்தால் தான் செல்லுப்படியாகும் என்றும், புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ் செல்லுபடியாகாது என்றும் சிலர் தகவல்களை பேசி யூடியூப் மற்றும் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்தியாக பரப்பி வருகிறார்கள்.

இதை உண்மை என்று நம்பி, தமிழகத்தில் சில இ சேவை மையங்களில் புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ்கள் செல்லுபடியாகாது என கூறியபடி, அதனை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகிறார்கள் . அதனால் புகைப்படம் இல்லாத ஜாதி சான்றிதழ்கள் சட்டபூர்வமானதா இல்லையா? என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது

தற்போதைய நிலையில் புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் வழங்கப்டுகிறது. விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் QR கோடுடன் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன் வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழ்களில் புகைப்படங்கள் எதுவும் இடம் பெற்றிருக்காது.

Officials explain that old caste certificate without photo will be accepted in Tamil Nadu

சமூக ஊடகங்களில் பரவும் செய்தி குறித்து வருவாய் துறை அதிகாரியிடம் கேட்டபோது, சில இ சேவை நிறுவன ஊழியர்கள் சாதி சான்றிதழ் குறித்த தவறான புரிதலை பெற்றிருக்கிறார்கள். மேலும் பழைய ஜாதி சான்றிதழ்களை ஆன்லைனில் மாற்றுவதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. பழைய சாதி சான்றிதழ் கிழிந்திருந்தாலோ அல்லது தொலைந்து விட்டால் மட்டுமே புதிதாக விண்ணப்பித்து பெறலாம் மற்றபடி அதனை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை என்று கூறினார்கள். எனவே மக்களே சாதி சான்றிதழ் புகைப்படம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் செல்லும். எதையும் மாற்றுவதற்கு அலைய வேண்டாம்

No comments:

Post a Comment

Popular

Post Top Ad