எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! 5 ஆயிரம் பணியிடங்கள்.. கை நிறைய சம்பளம்.. அப்ளை பண்ண ரெடியா - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்

  கல்லூரி ஆசிரியர்களுக்கு விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டம்   அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இ...

Thursday, November 23, 2023

எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! 5 ஆயிரம் பணியிடங்கள்.. கை நிறைய சம்பளம்.. அப்ளை பண்ண ரெடியா

எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! 5 ஆயிரம் பணியிடங்கள்.. கை நிறைய சம்பளம்.. அப்ளை பண்ண ரெடியா

சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ வங்கியில் CBO பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் எஸ்.பி.ஐ. இந்த வங்கியில் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப அவகாசம் தொடங்கியுள்ள நிலையில் தற்போது சிபிஓ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து பார்க்கலாம்.

 SBI CBO vacancies 2023: 5280 Circle Based Officer posts how to apply full details here
கல்வி தகுதி: சிபிஒ பணிகளுக்கு மொத்தம் 5,309 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வி தொகுதியை பொறுத்தவரை ஏதேனும் ஒரு பட்ட படிப்பு முடித்து இருந்தால் போதும். மெடிக்கல், என்ஜினியரிங், சார்டர்டு அக்கவுண்டண்ட் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவமும் அவசியம். ரிசர்வ் வங்கியின் 2-வது பட்டியலில் இடம் பெற்றுள்ள கம்ர்ஷியல் வங்கிகள் அல்லது பிராந்திய ஊரக வங்கிகளில் பணியாற்றிய அனுபவம் அவசியம். அனுபவம் குறித்த விரிவான விவரங்களை விண்ணப்பதாரகள் தேர்வு அறிவிப்பில் பார்த்துக்கொள்ளலாம்.

வயது வரம்பு: 21- வயதுக்கு மேற்பட்டவர்களும் 30-வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி தளர்வுகளும் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்னப்பதாரர்களுக்கு 36,000 - 63,840 வரை சம்பளமாக கிடைக்கும். பணியிடங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் எதாவது ஒரு இடத்தில் பணியமர்த்தப்பட வாய்ப்புள்ளது.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப அவகாசம் தொடங்கும் தேதி 22.11.2023 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 12.02.2023 ஆகும். ஆன்லைன் வழி தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும். தேர்வு அறிவிப்பை படிக்க https://sbi.co.in/web/careers/current-openings இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Popular

Post Top Ad